நிலக்கரி அமைச்சகம்
சொந்த நிலக்கரி சுரங்க வளர்ச்சியை விரைந்து மேம்படுத்துமாறு, உத்தரப்பிரேதசத்தை மத்திய நிலக்கரி அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
17 SEP 2026 8:51AM by PIB Chennai
நிலக்கரி விநியோகம் பாதிப்பு காரணமாக உத்தரப்பிரதேச மாநிலம் மின்சாரப் பற்றாக்குறையை எதிர்கொள்வதாக சமீபத்தில் ஊடகங்களில் செய்தி வெளியானது.
உண்மை நிலையை தெளிவுபடுத்தவும், தனது சொந்த நிலக்கரிச் சுரங்கத்தின் வளர்ச்சியை மாநில அரசு விரைவுபடுத்த வேண்டும் என்று நிலக்கரி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மாநிலத்தின் நிலக்கரித் தேவையை கோல் இந்தியா நிறுவனம் முழுமையாக பூர்த்தி செய்து வருகிறது. 15.09.2026 அன்று உத்தரப்பிரேதச மாநிலத்தின் அனல் மின் நிலையத்திலும் நிலக்கரி கையிருப்பில் எவ்வித பாதிப்பும் இல்லை. தற்போதைய கையிருப்பைப் பார்க்கும்போது, நிலக்கரி பற்றாக்குறை இல்லை என்றே தெரிகிறது.
மேலும், கடந்த 10 நாள்களில் சராசரியாக சுமார் 17.7 ரேக்குகள் நிலக்கரி உத்தரப்பிரதேச மின் நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, சொந்த நிலக்கரி சுரங்க வளர்ச்சியை உத்தரப்பிரேதச அரசு மேம்படுத்த வேண்டும் என்று நிலக்கரி அமைச்சகம் குறி்ப்பிட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2311178®=3&lang=1
***
TV/MM/SM
(வெளியீட்டு அடையாள எண்: 2311317)
வருகையாளர் எண்ணிக்கை : 8