கலாசாரத்துறை அமைச்சகம்
தொல்லியல் நிறுவனத்தில் புதிய பயிற்சித் திட்டங்கள் துவக்கம்
இடுகை இடப்பட்ட நாள்:
15 SEP 2026 7:20PM by PIB Chennai
கிரேட்டர் நொய்டாவில் உள்ள பண்டிட் தீன்தயாள் உபாத்யாய வளாகத்தில் அமைந்துள்ள தொல்லியல் நிறுவனத்தில், புதிதாகப் பணியில் சேர்ந்த மூத்த பாதுகாப்பு உதவியாளர்கள், பாதுகாப்பு உதவியாளர்களுக்கான அறிமுகப் பயிற்சித் திட்டத்தை கலாச்சார அமைச்சகத்தின் செயலாளர் திரு விவேக் அகர்வால் இன்று தொடங்கி வைத்தார். நாடு முழுவதும் உள்ள பல்வேறு இந்தியத் தொல்லியல் ஆய்வு மண்டல அலுவலகங்களில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 53 பேர் இந்த ஒரு மாத கால பயிற்சியில் பங்குபெறுவர்.
பயிற்சியாளர்களிடையே உரையாற்றிய திரு விவேக் அகர்வால், இந்த நிறுவனத்தை ஒரு சர்வதேச சிறப்பு மையமாக மாற்றுவதற்கான ஒரு உத்திசார் மாற்றத்தை விவரித்தார். இந்தியாவின் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களை பொருளாதார ஊக்கிகளாகப் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். "நினைவுச்சின்னப் பொருளாதாரம்" என்பதை முன்னிலைப்படுத்திய அவர், கலாச்சார பாரம்பரியம், நேரடியாகவோ, அரசு-தனியார் கூட்டு முயற்சியிலோ சுற்றுலா, உள்ளூர் போக்குவரத்து, விருந்தோம்பல், கைவினைஞர் சந்தைகள், ஒளி-ஒலி நிகழ்ச்சிகள், திட்டமிடப்பட்ட பாரம்பரிய நடைப்பயணங்கள் போன்றவற்றைத் தூண்டி, வேலைவாய்ப்பை உருவாக்குவதுடன், தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் பங்களிக்கிறது என்று தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2310610®=3&lang=1
***
TV/BR/SM
(வெளியீட்டு அடையாள எண்: 2311287)
வருகையாளர் எண்ணிக்கை : 5