சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ரூ.12,773 கோடி மதிப்பிலான கல்வி உதவித்தொகை மூலம் சுமார் 1.44 கோடி பட்டியலின மாணவர்கள் பயனடைந்துள்ளனர்

இடுகை இடப்பட்ட நாள்: 10 SEP 2026 6:16PM by PIB Chennai

மெட்ரிக் படிப்புக்கு முந்தைய மற்றும் பிந்தைய கல்வி உதவித்தொகைத் திட்டத்தின்  கீழ், 1.44 கோடிக்கும் அதிகமான பட்டியலின மாணவர்கள் பயனடைந்துள்ளனர். அவர்களின் கல்வி வளர்ச்சியை ஊக்குவிக்கவும், நிதி நெருக்கடிகளின்றி அவர்கள் கல்வியைத் தொடர உதவவும் மொத்தம் 12,773 கோடி ரூபாய் மதிப்பிலான உதவித்தொகைகள் வழங்கப்பட்டுள்ளன.

அதேபோன்று, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு மற்றும் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பிரிவுகளைச் சேர்ந்த 1.01 கோடிக்கும் அதிகமான மாணவர்கள், மெட்ரிக் படிப்புக்கு முந்தைய மற்றும் பிந்தைய கல்வி உதவித்தொகைத் திட்டத்தின்  கீழ் மொத்தம் ரூ. 2,445.05 கோடி மதிப்பிலான நிதியுதவியைப் பெற்றுள்ளனர். இத்தகைய பரவலான உதவித் திட்டச் செயல்பாடு, நலிவடைந்த பின்னணியைக் கொண்ட மாணவர்களுக்கு உள்ளடக்கிய கல்வி, சமமான வாய்ப்புகளை வழங்குவதில் அரசு கொண்டுள்ள அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2308831&reg=3&lang=1

***

TV/RB/RJ 


(வெளியீட்டு அடையாள எண்: 2310853) வருகையாளர் எண்ணிக்கை : 25
இந்த வெளியீட்டை படிக்க: Telugu , Kannada , English , Urdu , हिन्दी