தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தொலைக்காட்சி சேனல்களில் விளம்பரங்களின் கால அளவு தொடர்பான சேவைத் தரநிலைகள் (ரத்து செய்தல்) ஒழுங்குமுறைகள், 2026 வெளியீடு

இடுகை இடப்பட்ட நாள்: 10 SEP 2026 7:24PM by PIB Chennai

இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய், 2012 மே14  தேதியிட்ட தொலைக்காட்சி சேனல்களில் விளம்பரங்களின் கால அளவு தொடர்பான சேவைத் தரநிலைகள் (ரத்து செய்தல்) ஒழுங்குமுறைகள், 2012-ஐயும், அதன்கீழ் வெளியிடப்பட்ட அனைத்து ஆணைகள் மற்றும் அறிவுறுத்தல்களையும் ரத்து செய்வதற்கான தொலைக்காட்சி சேனல்களில் விளம்பரங்களின் கால அளவு தொடர்பான சேவைத் தரநிலைகள் (ரத்து செய்தல்) ஒழுங்குமுறைகள், 2026-ஐ வெளியிட்டுள்ளது.

தொலைக்காட்சி சேனல்களில் விளம்பரங்களின் கால அளவு தொடர்பான சேவைத் தரநிலைகள் (ரத்து செய்தல்) ஒழுங்குமுறைகள், 2012, ஒரு நிகழ்ச்சியை ஒளிபரப்பும்போது விளம்பரங்களுக்கான அதிகபட்ச கால அளவை 12 நிமிடங்களாக நிர்ணயித்துள்ளது. சந்தாதாரர்களின் நலனைப் பாதுகாக்கவும், விதிமுறைகளை முறையாகப் பின்பற்றுவதை உறுதி செய்யவும், சேவை வழங்குநர்களுக்கு உத்தரவு அல்லது வழிகாட்டுதல்களைப் பிறப்பிக்க டிராய்-க்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது.

கேபிள் தொலைக்காட்சி வலையமைப்புகள் விதி, 1994-ன் பிரிவு 7(11)-இல் நிர்ணயிக்கப்பட்டுள்ள விளம்பரங்களுக்கான கால அளவு வரம்பை, சேவைத் தரத்தின் அடிப்படையில் கண்காணித்து அமல்படுத்துவதை இந்த ஒழுங்குமுறைகள் நோக்கமாகக் கொண்டிருந்தன.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2308872&reg=3&lang=1

***

TV/RB/RJ 


(வெளியீட்டு அடையாள எண்: 2310780) வருகையாளர் எண்ணிக்கை : 28
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Kannada , Malayalam