பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உத்தராகண்ட், ராஜஸ்தானில் நடைபெறும் இந்திய-அமெரிக்க ராணுவ வீரர்களின் கூட்டுப்பயிற்சி

இடுகை இடப்பட்ட நாள்: 15 SEP 2026 4:45PM by PIB Chennai

இந்திய- அமெரிக்க ராணுவம் இடையிலான யூத் அப்யாஸ்- 22வது பதிப்பின் கூட்டுப்பயிற்சி உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள அவ்லி வெளிநாட்டு பயிற்சி மையத்தில் தொடங்கியது. இந்நிகழ்வில், ஜெனரல் கமாண்டிங் அதிகாரி மேஜர் ஜெனரல் அமரேஷ், அமெரிக்க ராணுவ அதிகாரி கொலோனெல் பெஞ்மின், இருநாடுகளை சேர்ந்த தலா 600 வீரர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டுப் பயிற்சியானது உத்தரகாண்டின் அவ்லி, ராஜஸ்தானிலும் ஒரேநேரத்தில் நடைபெற உள்ளது.    

இந்திய- அமெரிக்க ராணுவத்தின் பலத்தை மேம்படுத்தும் விதமாக மேற்கொள்ளப்படும் இந்த பயிற்சி மலை சார்ந்த பகுதிகளில் நடைபெறுகிறது. இப்பயிற்சியின்போது தங்களது திறமைகள், போர் முறைகள் குறித்து இருநாட்டு வீரர்களும் பகிர்ந்துகொள்கின்றனர்.  நவீன போர் கருவிகளின் பயன்பாடு தொடர்பாக, ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள மகாஜன் ஃபீல்ட் ஃபயரிங் ரேஞ்சில் செயல்முறையுடன் கூடிய விளக்கம் அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சியின்போது போர் உத்திகள், நவீன தொழில்நுட்ப அம்சங்கள் குறித்து இந்தியா- அமெரிக்கா நாடுகளைச் சேர்ந்த நிபுணர்களும் வீரர்களும் தங்களது கருத்துக்களை எடுத்துரைக்க உள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2310476&reg=3&lang=1

***

TV/LN/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2310666) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी