எரிசக்தி அமைச்சகம்
என்டிபிசி எலக்ட்ரான் விநாடி வினா 2026-27 மும்பை பிராந்திய சுற்றுப்போட்டி செப்டம்பர் 17 அன்று நடைபெறவுள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
15 SEP 2026 3:39PM by PIB Chennai
என்டிபிசி எலக்ட்ரான் விநாடி வினா 2026-27 மும்பை பிராந்திய சுற்றுப்போட்டி செப்டம்பர் 17 அன்று நடைபெறவுள்ளது. மும்பை கிழக்கு அந்தேரியிலுள்ள சிறப்பு பொருளாதார மண்டலத்தில் இப்போட்டி நடைபெறவுள்ளது.
வணிகம் மற்றும் மேலாண்மை உலகின் அனைத்தும் என்ற தலைப்பில் நடைபெறவுள்ள இந்த விநாடி வினாவில் பொறியியல் அல்லது மேலாண்மை படிப்புகள் பயின்று வரும் 2 மாணவர்கள் பங்கேற்கலாம். 100-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படும், இந்நிகழ்வு இளையோரிடையே அறிவு, பகுப்பாய்வு சிந்தனை, ஆர்வம், ஆரோக்கியமானப் போட்டி ஆகியவற்றைக் கொண்டாடுகிறது.
இப்போட்டியில் பங்கேற்பதற்கான பதிவு, நிகழ்வு நடைபெறும் நாளில் காலை 8.00 மணி முதல் 10.00 மணி வரை நடைபெறும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2310432®=3&lang=1
***
TV/IR/PS/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2310655)
வருகையாளர் எண்ணிக்கை : 7