நிலக்கரி அமைச்சகம்
சுரங்கத் தொழிலில் நவீன தொழில்நுட்பங்களை செயல்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ள மத்திய நிலக்கரி சுரங்க நிறுவனம்
இடுகை இடப்பட்ட நாள்:
15 SEP 2026 11:20AM by PIB Chennai
இந்தியாவில் சுரங்க தொழில் பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறது. பெரிய அளவிலான மூலதனம், திறன்மிகு சுரங்க பணியாளர்கள், சர்வதேச அளவிலான தொழில்நுட்பங்கள் என பல்வேறு சவால்களை சுரங்கத்தொழில் எதிர்கொண்டு வரும் நிலையில், இவைகளை மேம்படுத்த மத்திய நிலக்கரி அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், சுரங்கத்தொழிலில் தானியங்கி அம்சங்கள், ரோபோக்கள், செயற்கை நுண்ணறிவு, பசுமை சுரங்க தொழில்நுட்பம், புத்தாக்கம், ஆராய்ச்சி, திறன் மேம்பாடு, பாதுகாப்பு அம்சங்கள், சிறந்த சுற்றுச்சூழல் போன்றவற்றை நடைமுறைப்படுத்த இந்திய நிலக்கரி நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
குறிப்பாக, சுரங்கத்தொழிலை கண்காணிக்கும் வகையில், செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள இந்திய நிலக்கரி நிறுவனம், சுரங்கத்திற்கான வெடி வைப்பு முறையில் மாற்றங்களை கொண்டுவர திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, தூசுகள், அதிகளவு சத்தம், அதிர்வுகள் இல்லாத வகையில் நவீன தொழில்நுட்பத்தை நடைமுறைப்படுத்த உள்ளது. சுரங்கத்தொழிலில் எரிபொருள் சார்ந்த உபகரணங்களை பாதுகாப்பான முறையில் பயன்படுத்துவது குறித்து ஐஐடி மெட்ராஸ் உடன் இணைந்து இந்திய சுரங்க நிறுவனம் செயல்பட்டு வருகிறது. 2030ம் ஆண்டிற்குள் சுரங்கத்தொழிலை மேம்படுத்தும் வகையில் பல்வேறு கட்டுமான பணிகளுக்காக 1900 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட உள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2310319®=3&lang=1
****
TV/LN/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2310632)
வருகையாளர் எண்ணிக்கை : 6