பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

விமான படைப்பிரிவை மேம்படுத்துவது தொடர்பாக மேற்கு வான் கமான்ட் பிரிவு அதிகாரிகள் பங்கேற்ற கருத்தரங்கு

இடுகை இடப்பட்ட நாள்: 15 SEP 2026 3:20PM by PIB Chennai

மேற்கு வான் கமான்ட் பிரிவை சேர்ந்த ஸ்டேஷன் மாஸ்டர், வாரண்ட் அதிகாரிகள் பங்கேற்ற கருத்தரங்கு, அதன் தலைமை அலுவலகத்தில் 2026ம் ஆண்டு செப்டம்பர் 14ம் தேதி நடைபெற்றது. இதில், மேற்கு வான் கமான்ட் பிரிவு தலைவர் ஏர் மார்ஷல் ஜார்ஜ் தாமஸ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டார்.

இந்த கருத்தரங்கில் மேற்கு வான் கமான்ட் பிரிவு பகுதியில் நடைபெற்ற விமானப்படை பயிற்சிகள், அடுத்தகட்ட நகர்வுகள், பயிற்சியை மேம்படுத்துவது தொடர்பாக தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். மேலும், பணிச் சூழலை மேம்படுத்துவது, பணியின்போது வழக்கமாக எதிர்கொள்ளும் சவால்கள், விமானப்படை வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பயன்பெறும் வகையிலான நலத்திட்டங்களை வலுப்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தினர்.

தகவல் தொடர்பு, பணிரீதியாக சிறந்த அணுகுமுறை, விமானப்படை வீரர்களுக்கான நலத்திட்டங்கள் போன்ற விஷயங்களில் அனைத்து விமானப்படை நிலையங்களில் நேர்மறையான சூழலை உருவாக்குவது குறித்தும் இந்த கருத்தரங்கில் ஆலோசிக்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2310420&reg=3&lang=1

***

TV/LN/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2310626) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Punjabi , Gujarati , Telugu