அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

அறிவியல் ஆராய்ச்சி குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த சரள் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படவுள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 15 SEP 2026 8:46AM by PIB Chennai

தேசிய அறிவியல் தகவல் தொடர்பு மற்றும் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் தமது பத்திரிக்கைகளில் வெளியிடப்படும் ஆராய்ச்சி முடிவுகளை எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் காணொலிகளாக மாற்றக்கூடிய சரள் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துகிறது. இதன்மூலம், அறிவியல் தகவல் தொடர்பை வலுப்படுத்துவதில் ஒரு புதிய முன்முயற்சியை மேற்கொண்டுள்ளது. சரள் செயற்கை நுண்ணறிவானது புதுதில்லியிலுள்ள அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் முன்முயற்சியாகும்.

அறிவியல், ஆராய்ச்சி தகவல்களைத் திறன்மிக்க வகையில் பகிர்ந்து கொள்ள வளர்ச்சியடைந்து வரும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த அரசு மேற்கொண்டு வரும் முக்கியத்துவத்திற்கு ஏற்ற வகையில் இம்முயற்சி அமைந்துள்ளது. அண்மையில் சரள் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துமாறு மத்திய அறிவியல், தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் ஊக்குவித்தார். இதைப் பின்பற்றுவதில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சிக் குழுமம் (சிஎஸ்ஐஆர்), தேசிய அறிவியல் தகவல் தொடர்பு மற்றும் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் (என்ஐஎஸ்சிபிஆர்) ஆகியவை முன்னனி நிறுவனமாக உள்ளது.

இந்நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் கீதா வாணி ரயாசம் தலைமையின் கீழ், அறிவியல் தகவல் தொடர்பையும் அதன் தாக்கத்தையும் விரிவுபடுத்த, இந்நிறுவனம் நவீன தகவல் தொழில்நுட்பங்கள், டிஜிட்டல் தளங்கள் ஆகியவற்றை ஆராய்ந்து வருகிறது. இந்த முன்முயற்சியின் ஒரு பகுதியாக பத்திரிக்கை ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்ட 90-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற சரள் செயற்கை நுண்ணறிவு குறித்த பயிலரங்கை இந்நிறுவனம் நடத்தியது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2310298&reg=48&lang=1

***

TV/IR/PS/GS 


(வெளியீட்டு அடையாள எண்: 2310395) வருகையாளர் எண்ணிக்கை : 12
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Telugu