நிலக்கரி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நிலக்கரி அமைச்சகம், சிறப்பு இயக்கம் 6.0-க்குத் தயாராகிறது

இடுகை இடப்பட்ட நாள்: 14 SEP 2026 3:43PM by PIB Chennai

மத்திய அரசு, “ மின்னணுக் கழிவுகளைத் திறம்பட சேகரித்தல், தரம் பிரித்தல், அகற்றுதல் என்பதற்குச் சிறப்பு முக்கியத்துவம் அளித்து, 2026 அக்டோபர் 2 முதல் 31 வரை மேற்கொள்ளப்படவுள்ள சிறப்பு இயக்கம் 6.0-ஐ அறிவித்துள்ளது.

 

2025 அக்டோபர் 2-ம் தேதி முதல் 2025 அக்டோபர் 31-ம் தேதி வரை நடைபெற்ற சிறப்பு இயக்கம் 5.0, தூய்மை, கழிவு மேலாண்மை, சுற்றுச்சூழல் பொறுப்புணர்வு ஆகியவற்றில் அர்ப்பணிப்பை வலுப்படுத்தியது. நிலக்கரி அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் கீழ் செயல்படுத்தப்பட்ட இந்த இயக்கம், அதன் அதிகார வரம்பிற்குட்பட்ட அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள், கள அலுவலகங்களில் சிறந்த முடிவுகளை அளித்தது.

 

சிறப்பு இயக்கம் 5.0-ன் போது, அமைச்சகம் 1.13 கோடி சதுர அடிக்கும் அதிகமான பரந்த பகுதியைச் சுத்தம் செய்ததுடன் , 14,017 மெட்ரிக் டன்களுக்கும் அதிகமான பழைய இரும்புகளை அப்புறப்படுத்தியது. இதன் மூலம் பழைய இரும்பு அகற்றல் வழியாக ₹56.85 கோடி வருவாய் ஈட்டப்பட்டது.

 

சிறப்பு இயக்கம் 5.0-இன் வெற்றியானது, சுற்றுச்சூழல் பொறுப்புணர்வில் அமைச்சகத்தின் அர்ப்பணிப்பை எடுத்துக் காட்டுவதோடு, சிறப்பு இயக்கம் 6.0-ஐ வெற்றிகரமாகவும் தாக்கத்துடனும் செயல்படுத்துவதற்கு ஒரு வலுவான அடித்தளத்தையும் அமைத்துள்ளது.

 

சிறப்பு இயக்கம் 6.0-க்கான ஆயத்தப் பணிகளின் ஒரு பகுதியாக, நிலக்கரி அமைச்சகம், அதன் இணைச் செயலாளர் (ஒருங்கிணைப்பாளர்) தலைமையில், 2026 செப்டம்பர் 1 அன்று ஆயத்தக் கூட்டங்களை நடத்தியுள்ளது.

இதில் சிறப்பு இயக்கம் 6.0-ன் கீழ் திட்டமிடப்பட்டுள்ள பல்வேறு செயல்பாடுகள் குறித்து ஒருங்கிணைப்பு அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2310057&reg=3&lang=1

 

(Release ID: 2310057)

****

TV/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2310234) வருகையாளர் எண்ணிக்கை : 11
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Telugu