வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2026 ஆகஸ்ட் மாதத்திற்கான மொத்த விலைக் குறியீட்டின் தற்காலிக மதிப்பீடுகள் (அடிப்படை ஆண்டு 2022-23)

இடுகை இடப்பட்ட நாள்: 14 SEP 2026 12:01PM by PIB Chennai

ஆகஸ்ட் 2026-க்கான மொத்த விலை குறியீட்டின் (அடிப்படை ஆண்டு 2022-23) முக்கிய அம்சங்கள்:

* ஆகஸ்ட் 2026-க்கான அகில இந்திய மொத்த விலைக் குறியீட்டு பணவீக்கம், ஆண்டு அடிப்படையில் 9.92 சதவீதமாக உள்ளது. இது ஜூலை 2026-ல் 9.78 சதவீதமாக இருந்தது. அனைத்துப் பொருட்களுக்கான குறியீடு ஆகஸ்ட் 2026-ல் 110.8 ஆக உள்ளது, அதேசமயம் ஜூலை 2026-ல் இது 110.0 ஆக இருந்தது.

* முக்கியப் பிரிவுகளான மூலப்பொருட்கள், எரிபொருள், மின்சாரம், உற்பத்திப் பொருட்கள் ஆகியவற்றின் ஆண்டுக்காண்டு பணவீக்க விகிதங்கள், ஜூலை 2026-ல் முறையே 8.52 சதவீதம், 20.05 சதவீதம், 8.29 சதவீதமாக இருந்த்து. இது, ஆகஸ்ட் 2026-ல் முறையே 7.76 சதவீதம், 22.93 சதவீதம், மற்றும் 8.37 சதவீதமாக இருந்தன.

* மூலப்பொருட்கள், எரிபொருள், மின்சாரம், உற்பத்திப் பொருட்கள் ஆகியவற்றின் குறியீடுகள் ஆகஸ்ட் 2026-ல் முறையே 118.1, 108.3, 108.8 ஆக உள்ளன. அதேசமயம், ஜூலை 2026-ல் அவை முறையே 117.2, 105.4, மற்றும் 108.4 ஆக இருந்தன.

* பல்வேறு பிரிவுகளில், கனிம எண்ணெய்கள் (பெட்ரோலியப் பொருட்கள் அடங்கியவை), உணவுப் பொருட்கள், உணவுப் பொருட்கள் உற்பத்தி, அடிப்படை உலோகங்கள் உற்பத்தி, உணவு அல்லாத பொருட்கள், ரசாயனங்கள் ஆகியவை ஆகஸ்ட் 2026-ல் மொத்த விலை குறியீட்டுப் பணவீக்கத்தின் முக்கிய உந்து சக்திகளாக இருந்துள்ளன.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2309977&reg=3&lang=1

(Release ID: 2309977)

****

TV/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2310179) வருகையாளர் எண்ணிக்கை : 14
இந்த வெளியீட்டை படிக்க: Bengali , Bengali-TR , English , हिन्दी , Marathi