சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் தலைமையில் சதுப்புநிலக் காடுகளின் பாதுகாப்பு குறித்த பயிலரங்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 13 SEP 2026 8:00PM by PIB Chennai

மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ், குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள புஜ் நகரில் நடைபெற்ற சதுப்புநிலக் காடுகளின் பாதுகாப்பு, மீட்பு மற்றும் நிலையான மேலாண்மை குறித்த பயிலரங்கில் உரையாற்றினார். பயிலரங்கில் உரையாற்றிய அமைச்சர், கடலோரப் பல்லுயிர்ப் பெருக்கம், மீன்வளம், கடற்கரைப் பாதுகாப்பு, பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் திறன் மற்றும் வாழும் சூழலியலாக சதுப்புநிலக் காடுகளைப் பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

 

மிஷ்டி எனப்படும் கடற்கரை வாழ்விடங்கள் மற்றும் நிலையான வருமானங்களுக்கான சதுப்புநில முன்முயற்சித் திட்டத்தின் கீழ் குஜராத்தின் சதுப்புநிலப் பாதுகாப்பு முயற்சிகளை ஆய்வு செய்த திரு யாதவ், மீட்பு, அறிவியல் மேலாண்மை, சமூகப் பங்கேற்பு, தொழில்நுட்பம் சார்ந்த கண்காணிப்பு ஆகியவற்றிற்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தைக் குறிப்பிட்டார். மிஷ்டி திட்டத்தின் கீழ், 2023-27-ம் ஆண்டுக்கான 29,250 ஹெக்டேர் இலக்கிற்கு எதிராக 27,652 ஹெக்டேர் சதுப்புநிலங்கள் மீட்டெடுக்கப்பட்டு, குஜராத் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது என்றும், இதில் சூழலியல் ரீதியாக சவாலான கோரி க்ரீக் பகுதியில் உள்ள 12,450 ஹெக்டேரும் அடங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

 

இந்த நிகழ்ச்சியில், கட்ச் சதுப்புநிலக் காடுகள் குறித்த 'காபி டேபிள்' புத்தகம் மற்றும் குஜராத் சதுப்புநிலக் காடுகள் குறித்த வரைபடத் தொகுப்பு ஆகியவற்றை வெளியிட்ட அமைச்சர், சதுப்புநில ஜிஐஎஸ் வலைத்தளத்தையும் தொடங்கி வைத்தார். இவை மாநிலம் முழுவதும் உள்ள சதுப்புநில வாழிடங்கள் குறித்த கண்காணிப்பு மற்றும் அறிவியல் பூர்வமான முடிவெடுக்கும் தன்மை ஆகியவற்றை வலுப்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2309866&reg=3&lang=1

***

TV/BR/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2310038) வருகையாளர் எண்ணிக்கை : 12
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati