பிரதமர் அலுவலகம்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகரின் ஆசிகளை வேண்டி சமஸ்கிருத ஸ்லோகத்தைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
14 SEP 2026 8:41AM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, விநாயகர் சதுர்த்தி பண்டிகையின் புனிதமான நன்னாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் தமது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். தடைகளையும் துன்பங்களையும் களையும் கடவுளான விநாயகரை வழிபட்டு, அவரது ஆசிகளைப் பெறும் இந்தப் புனிதத் திருவிழா, அனைவரின் வாழ்விலும் புதிய ஆற்றலையும் உற்சாகத்தையும் ஊட்டும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். விநாயகப் பெருமானின் தெய்வீக ஆசிகளால், அனைவரின் முயற்சிகளும் வெற்றிபெற்று, தேசம் வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்து முன்னேறட்டும் என்று பிரார்த்தனை செய்வதாகப் பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.
இது தொடர்பாக ஒரு சமஸ்கிருத ஸ்லோகத்தைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்.
அந்த ஸ்லோகம் கூறுவது என்னவென்றால், "மோதகங்களால் அலங்கரிக்கப்பட்ட புனிதக் கரங்களைக் கொண்டவரும், முக்திப் பாதையைத் தேடுபவர்களுக்கு என்றென்றும் வழிகாட்டுபவரும், தன் நெற்றியில் பிறை நிலவை ஆபரணமாக அணிந்தவரும், முழு பிரபஞ்சத்திற்கும் பாதுகாவலரும், அண்டத்தின் ஒரே பரம பிரபுவுமான ஸ்ரீ விநாயகப் பெருமானை வணங்குகிறேன். கஜாசுரன் எனும் அசுரனை வென்றவரும், தன் பக்தர்களை எல்லாத் துக்கங்களிலிருந்தும் துன்பங்களிலிருந்தும் விரைவாக விடுவிப்பவர் விநாயகர் ஆவார்."
(Release ID: 2309933)
****
TV/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2309994)
வருகையாளர் எண்ணிக்கை : 7