பாதுகாப்பு அமைச்சகம்
தற்கால பாதுகாப்பு சவால்கள் குறித்த நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைந்த பாதுகாப்புப் படைத் தலைமையகம் ஏற்பாடு
இடுகை இடப்பட்ட நாள்:
13 SEP 2026 3:28PM by PIB Chennai
ஒருங்கிணைந்த பாதுகாப்புப் படைத் தலைமையகம், பாதுகாப்புப் படைகளின் மூத்த அதிகாரிகளுக்காக, 'ஒருங்கிணைந்த செயல்பாட்டு ஆய்வு, மதிப்பீடு (கோர் - CORE)' என்ற பயிற்சி நிகழ்ச்சியை நாளை (2026 செப்டம்பர் 14) முதல் 18-ம் தேதி வரை புது தில்லியில் உள்ள மனேக்ஷா மையத்தில் ஏற்பாடு செய்துள்ளது. பாதுகாப்பு, வெளியுறவு, உள்துறை அமைச்சகங்களைச் சேர்ந்த அதிகாரிகள் இந்த ஐந்து நாள் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.
கோர் திட்டமானது, பல்வேறு துறைகளைச் சேர்ந்த புகழ்பெற்ற துறைசார் நிபுணர்கள், பிரபல பேச்சாளர்களுடனான கலந்துரையாடல்கள் மூலம், பிராந்தியப் பாதுகாப்புப் பிரச்சினைகள் குறித்த அறிமுகத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டம், சவால்களைப் பற்றி ஆழமாகப் புரிந்துகொள்ள உதவுவதோடு, பங்கேற்பாளர்கள் தங்களின் எதிர்காலத் தலைமைப் பொறுப்புகளில் சமநிலையான, நன்கு அறிந்த முடிவுகளை எடுக்கவும் வழிவகுக்கும்.
இந்த ஐந்து நாள் செயல்திட்டமானது, சிக்கலான பிரச்சினைகளைக் கையாள்வதில் மேம்படுத்தப்பட்ட புரிதலின் தேவை உள்ளிட்ட பல்வேறு கருப்பொருள்களை உள்ளடக்கியதாக இருக்கும்.
மேலும் விவரங்களுக்கு ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2309720®=3&lang=1
***
TV/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2309831)
வருகையாளர் எண்ணிக்கை : 4