நிலக்கரி அமைச்சகம்
பஞ்சாப் மின் உற்பத்தி நிலையங்களுக்கு, போதுமான நிலக்கரி விநியோகிக்கப்படுகிறது - மத்திய அரசு விளக்கம்
இடுகை இடப்பட்ட நாள்:
13 SEP 2026 2:13PM by PIB Chennai
பஞ்சாபில் தொழிற்சாலைகளுக்கும்., விவசாய பயன்பாடுகளுக்கும் 14 மணி நேர மின்வெட்டால் அந்த மாநிலத்தில் மின் நெருக்கடி தீவிரமடைகிறது என்று சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. பஞ்சாபின் அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி குறைந்ததற்கு, ஆலை முடக்கம், போதுமான நிலக்கரி விநியோகம் இல்லாததே காரணம் என்று அந்தச் செய்திகள் கூறியுள்ளன. இது முழுமையான நிலையை விளக்கவில்லை என மத்திய நிலக்கரி அமைச்சகம் தெளிவுபடுத்துகிறது. பஞ்சாபின் மின் நிலையங்களுக்குப் போதுமான நிலக்கரி வழங்கப்பட்டுள்ளதுடன், பஞ்சாப் உட்பட நாடு முழுவதும் மின் உற்பத்திக்குத் தடையற்ற நிலக்கரி விநியோகத்தை உறுதி செய்வதில் கோல் இந்தியா லிமிடெட் முழுமையாக உறுதியுடன் உள்ளது. சிஐஎல்-ன் துணை நிறுவனங்கள் பஞ்சாபை தளமாகக் கொண்ட மின் உற்பத்தியாளர்களுக்கு கூடுதல் நிலக்கரியை வழங்கியுள்ளன.
நிலக்கரி அமைச்சகமும் கோல் இந்தியா லிமிடெட்டும், தற்போதுள்ள எரிபொருள் விநியோக ஏற்பாடுகளின் கீழ், பஞ்சாப் மாநிலத்திற்கு நிலக்கரியை வழங்குவதில் உறுதியாக உள்ளன. இந்த ஏற்பாடுகள், பஞ்சாப் மாநில மின் கழகம் உட்பட மாநிலத்தில் உள்ள அனைத்து மின் உற்பத்தியாளர்களையும் உள்ளடக்கியுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2309696®=3&lang=1
***
TV/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2309810)
வருகையாளர் எண்ணிக்கை : 14