ஆயுஷ்
பாரம்பரிய மருத்துவம் குறித்த நிபுணர் குழுவுக்கு பிரிக்ஸ் ஆதரவு
இடுகை இடப்பட்ட நாள்:
13 SEP 2026 2:07PM by PIB Chennai
18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட புதுதில்லி பிரகடனமானது, சுகாதார அமைப்புகளை வலுப்படுத்துவதற்கும் உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பிற்கு பங்களிப்பதற்கும் பாரம்பரிய மருத்துவம், துணை மருத்துவம், ஒருங்கிணைந்த மருத்துவம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அங்கீகரித்து, அதில் சர்வதேச ஒத்துழைப்பிற்கு ஒரு குறிப்பிடத்தக்க உந்துதலை அளித்துள்ளது.
பிரிக்ஸ் சுகாதாரப் பிரிவின் கீழ், பாரம்பரிய மருத்துவத்திற்கான பிரிக்ஸ் நிபுணர் பணிக்குழு ஒன்றை அமைக்கும் முன்மொழிவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டதே இந்தப் பிரகடனத்தின் ஒரு முக்கிய அம்சமாகும். முன்மொழியப்பட்ட இந்தப் பணிக்குழு, பிரிக்ஸ் உறுப்பு நாடுகளிடையே உரையாடல், ஒத்துழைப்பு, பரிமாற்றத்திற்கான ஒரு தளமாகவும், பாரம்பரிய மருத்துவத்தில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான ஒரு கட்டமைக்கப்பட்ட வழிமுறையை வழங்குவதாகவும் அமையும்.
ஆயுஷ் இணையமைச்சருமான திரு பிரதாப்ராவ் ஜாதவ் இது குறித்துக் கூறுகையில், புதுதில்லி பிரகடனத்தில் பாரம்பரிய, துணை, ஒருங்கிணைந்த மருத்துவத்திற்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டிருப்பது, பாரம்பரிய மருத்துவத்தில் உலகளாவிய ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான ஒரு முக்கியப் படியாகும் என்றார்ர. முன்மொழியப்பட்ட பிரிக்ஸ் நிபுணர் பணிக்குழுவானது, உறுப்பு நாடுகள் அறிவைப் பகிர்ந்துகொள்ளவும், ஆராய்ச்சியை வலுப்படுத்தவும், சான்றுகள் அடிப்படையிலான அணுகுமுறைகளை மேம்படுத்தவும் ஒரு சிறந்த தளத்தை வழங்கும் என்று அவர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இது ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2309695®=48&lang=1
***
TV/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2309801)
வருகையாளர் எண்ணிக்கை : 6