சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
தூய்மைப் பணி முதல் தற்சார்பு வரை: இயந்திரமயமாக்கப்பட்ட தூய்மைப் பணியில் திரு ஹரிஷ் சந்திர பர்பத்தின் பயணம்
இடுகை இடப்பட்ட நாள்:
13 SEP 2026 1:17PM by PIB Chennai
இயந்திரமயமாக்கப்பட்ட தூய்மை உபகரணங்களுக்கான அணுகல், நிதியுதவி ஆகியவை, தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தவும் குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றவும் உதவும். வாழ்வாதார மேம்பாட்டிற்கான ஆதரவு, வருமான வாய்ப்புகளை எவ்வாறு மேம்படுத்தி, அடுத்த தலைமுறையினர் உயர்கல்வியைத் தொடர வழிவகுக்கும் என்பதை திரு ஹரிஷ் சந்திர பர்பத்தின் பயணம் பிரதிபலிக்கிறது.
பீகார் மாநிலம் சிவான் மாவட்டத்தைச் சேர்ந்த 46 வயதான தூய்மைப் பணியாளரான திரு ஹரிஷ் சந்திர பர்பத், ஸ்வச்தா உத்யமி யோஜனா திட்டத்தின் கீழ் கிடைத்த உதவியின் மூலம் தனது வாழ்வாதாரத்தை வலுப்படுத்தியுள்ளார்.
இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரும், பன்னிரண்டாம் வகுப்பு வரை கல்வி கற்றவருமான இவர், தற்போது காசியாபாத் மாநகராட்சியின் கீழ் சாஹிபாபாத் தொழிற்பேட்டையில் தூய்மைப் பணிகளுக்காக டிராக்டர், உறிஞ்சும் இயந்திரம் ஆகியவற்றை இயக்கி வருகிறார்.
வேலைவாய்ப்பையும், பாதுகாப்பான எதிர்காலத்தையும் தேடி, திரு பர்பத் 2015-ம் ஆண்டு தில்லிக்குக் குடிபெயர்ந்தார். அவர் தூய்மை தொடர்பான பணிகளில் ஈடுபட்டு, படிப்படியாகக் கழிவுநீர், செப்டிக் டேங்க் செயல்பாடுகளில் நடைமுறை அனுபவத்தைப் பெற்றார். 2015 முதல் 2020 வரை, அவர் இந்தப் பணிகளில் தொடர்ந்து பணியாற்றினார்.
26 நவம்பர் 2021 அன்று வழங்கப்பட்ட நிதியுதவி, ஒரு டிராக்டர், உறிஞ்சும் இயந்திரத்தை வாங்குவதற்கு அவருக்கு உதவியது. ₹9,75,400 மொத்த திட்டச் செலவிற்கு எதிராக, அவர் ₹6,06,550 கடனாகவும், ₹3,68,850 முன்பண மூலதன மானியமாகவும் பெற்றார். இந்த ஆதரவு, அவரது தூய்மை சேவைப் பணிகளை வலுப்படுத்தவும், வருவாய் ஈட்டும் திறனை மேம்படுத்தவும் உதவியது.
இயந்திரமயமாக்கப்பட்ட உபகரணங்களைப் பயன்படுத்தியதால், திரு பர்பத்தின் மாத வருமானம் அதிகரித்தது. இந்த முன்னேற்றம், அவர் தனது குடும்பப் பொறுப்புகளைச் சிறப்பாக நிறைவேற்ற உதவியது. 2022-ல், அவர் தனது மனைவியையும் பிள்ளைகளையும் தில்லிக்கு அழைத்து வந்தார். இது அவரது குடும்பத்தின் நிதி நிலையை வலுப்படுத்தியதோடு, அவரது மூன்று பிள்ளைகளும் உயர்கல்வியைத் தொடர்வதற்கான வாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2309685®=48&lang=1
***
TV/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2309771)
வருகையாளர் எண்ணிக்கை : 9