ஆயுஷ்
azadi ka amrit mahotsav

இந்தியாவின் மருத்துவப் பாரம்பரியத்திற்கு பரந்த அங்கீகாரம் கிடைக்க வேண்டும் : நித்தி ஆயோக் உறுப்பினர் பேராசிரியர் டாக்டர் எம். சீனிவாஸ்

இடுகை இடப்பட்ட நாள்: 11 SEP 2026 7:18PM by PIB Chennai

நித்தி ஆயோக் அமைப்பின் சுகாதாரத் துறை உறுப்பினர் டாக்டர் எம். சீனிவாஸ், ஹைதராபாத்தில் ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சிசிஆர்ஏஎஸ்–தேசிய இந்திய மருத்துவ பாரம்பரிய நிறுவனத்தை (என்ஐஐஎம்ஹெச்) பார்வையிட்டார்.

 

புது தில்லியில் உள்ள ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சிலின் துணை தலைமை இயக்குநர் டாக்டர் என் ஸ்ரீகாந்த், பேராசிரியர் ஸ்ரீனிவாஸை வரவேற்று, நிறுவனத்தின் முன்முயற்சிகள், டிஜிட்டல் தளங்கள், பாரம்பரிய மருத்துவ முறைகளில் மேற்கொள்ளப்பட்ட வரலாற்று ஆராய்ச்சிகள் குறித்து அவருக்கு விளக்கினார். இந்தியாவின் வளமான மருத்துவப் பாரம்பரியத்தை ஆவணப்படுத்துவதிலும் பாதுகாப்பதிலும் என்ஐஐஎம்ஹெச் வகிக்கும் முக்கியப் பங்கையும் அவர் எடுத்துரைத்தார்.

 

பேராசிரியர் டாக்டர் எம். சீனிவாஸ் தமது உரையில், இந்தியாவின் வளமான மருத்துவப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்காக, திறன்களை வளர்க்கவும் திறமையான மனிதவளத்தை உருவாக்கவும் பயிற்சி வகுப்புகள், சான்றிதழ் படிப்புகள் அறிமுகப்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இந்தியாவின் வளமான மருத்துவப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் என்ஐஐஎம்ஹெச் நிறுவனத்தின் முயற்சிகளை அவர் பாராட்டினார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2309280&reg=3&lang=1

 

(Release ID : 2309280)

***

TV/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2309445) வருகையாளர் எண்ணிக்கை : 5
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Telugu