தேர்தல் ஆணையம்
azadi ka amrit mahotsav

இன்றைய மாணவர்களே நாளைய ஜனநாயகத்தின் ஒளி விளக்குகள் : தலைமைத் தேர்தல் ஆணையர் திரு ஞானேஷ் குமார்

இடுகை இடப்பட்ட நாள்: 11 SEP 2026 6:52PM by PIB Chennai

தேர்தல் ஆணையம்  இளைஞர்களிடையே தேர்தல் தொடர்பான அறிவையும் ஜனநாயக விழிப்புணர்வையும் வலுப்படுத்தும் நோக்கில், தேர்தல் கல்வியறிவு மன்றங்கள், இசிஐநெட் (ECINET) குறித்த தனது ஐந்தாவது பிராந்திய மாநாட்டை இன்று (11.09.2026) அகமதாபாத்தில் நடத்தியது. இதில் உரையாற்றிய தலைமைத் தேர்தல் ஆணையர் திரு. ஞானேஷ் குமார், இன்றைய மாணவர்களே நாளைய ஜனநாயகத்தின் வழிகாட்டிகள் என்று கூறினார். மேலும், இந்தியா முழுவதும் உள்ள தேர்தல் கல்வியறிவு மன்றங்கள், உலகின் மிகப் பழமையான, மிகப்பெரிய ஜனநாயகத்தின் முதுகெலும்பை வலுப்படுத்த உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

குஜராத் முழுவதிலும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள் அடங்கிய பங்கேற்பாளர்களிடையே உரையாற்றிய தலைமைத் தேர்தல் ஆணையர் திரு ஞானேஷ் குமார், மாணவர்களை தேசத்தின் எதிர்காலம் என்று வர்ணித்தார். மேலும், தேர்தல் செயல்முறைகள் குறித்த புரிதலை முன்னெடுத்துச் செல்வதற்கும், ஜனநாயகத்தை வளப்படுத்துவதற்கும் தேர்தல் கற்றல் மையங்கள் இன்றியமையாதவை என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

மாணவர்களும் இளம் வாக்காளர்களும் இந்தியாவின் தேர்தல் முறை, ஜனநாயக விழுமியங்கள், வாக்காளர் பதிவு, வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை செயல்முறைகள், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் பங்கு, செயல்பாடுகள் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ள வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

 

இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக, மாணவர்களும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களும் பங்கேற்ற கேள்வி-பதில் அமர்வு இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலின் மூலம், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களும் தங்கள் சந்தேகங்களை நேரடியாகத் தெளிவுபடுத்திக்கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்தது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2309268&reg=3&lang=1

(Release ID : 2309268)

***

TV/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2309444) வருகையாளர் எண்ணிக்கை : 12
இந்த வெளியீட்டை படிக்க: English , हिन्दी , Punjabi , Urdu