சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
போதைப் பழக்கத்திலிருந்து நிலைத்தன்மையை நோக்கி: ராஜுவின் மீட்சிப் பயணம்
இடுகை இடப்பட்ட நாள்:
11 SEP 2026 5:26PM by PIB Chennai
போதைப்பொருள் பழக்கம் ஒருவரின் மனநலம், குடும்ப உறவுகள், வேலைவாய்ப்பு, சமூகத்தில் அவரது நிலை ஆகியவற்றைப் பாதிக்கும். சரியான நேரத்தில் வழங்கப்படும் சிகிச்சை, ஆலோசனை, தொடர்ச்சியான மறுவாழ்வு ஆதரவு ஆகியவை, தனிநபர்கள் அந்தச் சார்புநிலையிலிருந்து மீண்டு, தங்கள் வாழ்க்கையை நிலைத்தன்மையுடனும் நம்பிக்கையுடனும் மீண்டும் கட்டியெழுப்ப உதவும்.
குஜராத்தின் அகமதாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயதான பயனாளி ராஜு (பெயர் மாற்றப்பட்டுள்ளது), குஜராத் கேலவானி அறக்கட்டளையால் நடத்தப்படும் நயா ஜீவன்-ஐஆர்சிஏ-வில் சிகிச்சையும் ஆலோசனையும் பெற்ற பிறகு போதைப்பொருள் பழக்கத்திலிருந்து மீண்டார்.
பல குடும்பச் சவால்களுக்கு இடையே போதைப் பொருள் பழக்கத்துக்கு ஆளான அவர், அந்தப் பழக்கத்திலிருந்து மீண்டு, தனது குடும்பத்திலும் சமூகத்திலும் மீண்டும் அங்கீகாரத்தைப் பெற விரும்பினார்.
முறையான ஆலோசனை, மறுவாழ்வு சேவைகள், தொடர்ச்சியான ஆதரவின் மூலம், ராஜு போதைப்பொருள் பழக்கத்திலிருந்து மீண்டு, தனது மனநலத்தை அவர் மேம்படுத்திக் கொண்டார். ஒரு தனிநபர் போதைப்பொருள் சார்பிலிருந்து மீண்டு, வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என்பதை ராஜுவின் பயணம் காட்டுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2309207®=3&lang=1
(Release ID: 2309207)
***
TV/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2309425)
வருகையாளர் எண்ணிக்கை : 5