பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக ஐ.நா. பொதுச் செயலாளருடன் பிரதமர் சந்திப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 11 SEP 2026 9:29PM by PIB Chennai

பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக, பிரதமர் திரு நரேந்திர மோடி, இன்று ஐ.நா பொதுச் செயலாளர் மாண்புமிகு திரு அன்டோனியோ குட்டெரெஸ்-ஐ, புது தில்லியில்  சந்தித்துப் பேசினார்.

 

பிரிக்ஸ் அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா நான்காவது முறையாக ஏற்றுள்ளதற்காக, பிரதமருக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் வாழ்த்து தெரிவித்தார். இரு தலைவர்களும் பன்முனைத்தன்மையின் முக்கியத்துவத்தையும், சமகால யதார்த்தங்களைப் பிரதிபலிக்கும் வகையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உள்ளிட்ட பலதரப்பு அமைப்புகளைச் சீர்திருத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினர்.

 

நிகழ்ந்து வரும் மோதல்கள் மற்றும் தடையற்ற கப்பல் போக்குவரத்து, நிலையான வளர்ச்சி, மனிதனை மையமாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், உலகளாவிய உணவுப் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் அவர்கள் விவாதித்தனர்.

 

ஐ.நா. பொதுச் செயலாளர் திரு குட்டெரெஸ், தனது பதவிக்காலத்தின் எஞ்சிய காலத்திலும் தொடர்ந்து சிறப்பாகச் செயல்படப் பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2309334&reg=3&lang=1

****

TV/BR/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2309344) வருகையாளர் எண்ணிக்கை : 12
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Gujarati