நிலக்கரி அமைச்சகம்
பருவமழை பாதிப்புகளுக்கு மத்தியிலும் வளர்ச்சிப் பாதையில் நிலக்கரி உற்பத்தி
இடுகை இடப்பட்ட நாள்:
11 SEP 2026 2:01PM by PIB Chennai
நடப்பாண்டு பொதுத்துறை நிலக்கரி நிறுவனங்களின் நிலக்கரி உற்பத்தி சீரிய முறையில் வளர்ச்சிக் கண்டுள்ளது. கடந்த 2024-25 நிதி ஆண்டில் 167.44 மெட்ரிக் டன்னாக இருந்த நிலக்கரி உற்பத்தி, 2025 -26 நிதி ஆண்டில் 184 மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது. முந்தைய ஆண்டை காட்டிலும் ஏறத்தாழ 10.10% வளர்ச்சி கண்டுள்ளது.
இதே காலக்கட்டத்தில் தனியார் வர்த்தக சுரங்கங்கள் 26 மெட்ரிக் டன் நிலக்கரியை உற்பத்தி செய்துள்ளன. பொது மற்றும் தனியார் வர்த்தக நிறுவனங்கள் இணைந்து 2025 -26 நிதி ஆண்டில் 210 மெட்ரிக் டன் நிலக்கரியை உற்பத்தி செய்துள்ளன.
மொத்த உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியில், பொதுத் துறை மற்றும் வர்த்தகச் சுரங்கங்கள் சுமார் 21% பங்களிக்கின்றன. 2025-26 நிதியாண்டில் 1,039 மெட்ரிக் டன்னாக இருந்த நிலக்கரி உற்பத்தி, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக 100 டன்னுக்கும் மேல் அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
2025-26 நிதி ஆண்டின் இதே காலகட்டத்தில் 65.78 மெட்ரிக் டன்னாக இருந்த பொதுத் துறை சுரங்கங்களின் உற்பத்தி, 2026 செப்டம்பர் 10ஆம் தேதி வரை 68.98 மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது.
இந்த வளர்ச்சி, முந்தைய ஆண்டை விட 10.12% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. பருவமழை உள்ளிட்ட பல்வேறு இடர்களுக்கு நடுவே இந்த வளர்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், பொதுத் துறை சுரங்கங்களின் நிலக்கரி உற்பத்தி நடப்பு 2026-27 நிதியாண்டில் 190 மெட்ரிக் டன்னைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், பொது துறை மற்றும் தனியார் வர்த்தகச் சுரங்கங்களின் ஒட்டுமொத்த நிலக்கரி உற்பத்தி நடப்பு நிதி ஆண்டில் 228 மெட்ரிக் டன்னைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2309108®=3&lang=1
****
TV/AC/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2309326)
வருகையாளர் எண்ணிக்கை : 6