சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
உயிரி மருந்துகள் உற்பத்திக்கான சூழல் அமைப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள்
இடுகை இடப்பட்ட நாள்:
11 SEP 2026 5:00PM by PIB Chennai
நாட்டின் உயிரி மருந்துகள் உற்பத்திக்கான சூழல் அமைப்பை வலுப்படுத்துவது குறித்த நடவடிக்கைகளை மத்திய சுகாதாரத் துறை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் தன்னாட்சி அதிகாரம் பெற்ற இந்திய மருந்தியல் ஆணையம் செப்டம்பர் 10, 11 ஆகிய தேதிகளில் பயோசிமிலர்களின் தரநிலை மற்றும் பாதுகாப்பு குறித்த இரண்டு நாள் தேசிய மாநாட்டிற்கு ஏற்பாடு செய்திருந்தது.
பெங்களூருவில் நடைபெற்ற இந்த மாநாட்டில் ஒழுங்குமுறை ஆணையங்கள் தொழில்துறை, கல்வித்துறை, ஆராய்ச்சி நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரைச் சேர்ந்த 160 பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
புத்தாக்கம், தன்னிறைவு, தரம், உலகளாவிய போட்டித் திறன் ஆகியவற்றின் மூலம் நாட்டின் உயிரி மருந்துகளின் உற்பத்திக்கான சூழல் அமைப்பை வலுப்படுத்துவது குறித்து இதில் விவாதிக்கப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2309187®=3&lang=1
****
TV/SV/SM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2309324)
வருகையாளர் எண்ணிக்கை : 6