ஊரக வளர்ச்சி அமைச்சகம்
ஊரக வளர்ச்சி திட்டங்களை தீவிரப்படுத்த நடவடிக்கை : மாவட்ட நிர்வாகங்களுக்கு மத்திய குழு அறிவுறுத்தல்
இடுகை இடப்பட்ட நாள்:
11 SEP 2026 1:32PM by PIB Chennai
மணிப்பூரில் உள்ள ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் திட்டங்களுக்கான மத்திய அரசின் மாநில ஒருங்கிணைப்பு குழு அதிகாரியும், ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் துணை தலைமை இயக்குநருமான திரு அல்தாப் ஹுசைன் ஹாஜி தலைமையிலான அதிகாரிகள் குழு 2026 செப்டம்பர் 8 முதல் 10-ம் தேதி வரை பிஸ்னுபூர், சுரசந்த்பூர் மாவட்டங்களில் நடைபெறும் வளர்ச்சித் திட்டப் பணிகளை குறித்து ஆய்வு செய்தனர்.
ஆய்வின் இடையே அதிகாரிகள் குழு, அங்குள்ள சுய உதவிக் குழுக்கள், ஊரக மேம்பாட்டு வளர்ச்சித் திட்ட பயனாளிகள் உள்ளிட்டோரை சந்தித்து கலந்துரையாடினர்.
மேலும், பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதித் திட்டம், தேசிய சமூக உதவி திட்டப் பயனாளிகளின் குறைகளை கேட்டறிந்த குழுவினர், அதை உடனடியாக நிறைவேற்ற மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டனர்.
மேலும், மத்திய ஊரக வளர்ச்சித் திட்டங்களின் செயலாக்கத்தை விரைவுபடுத்துமாறும், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களின் நன்மைகள் குறித்து மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறும் மாவட்ட நிர்வாகத்திற்கு வலியுறுத்தினர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2309093®=3&lang=1
***
SS/AC/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2309258)
வருகையாளர் எண்ணிக்கை : 11