பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
சட்டப்பூர்வத் தத்தெடுப்பு, பாதுகாப்பான குழந்தைப் பருவம், பாதுகாப்பான எதிர்காலம் குறித்தப் பயிலரங்கு
இடுகை இடப்பட்ட நாள்:
11 SEP 2026 10:16AM by PIB Chennai
மத்தியப் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மத்தியத் தத்தெடுப்பு வள ஆணையம், தில்லி அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை, மாநில தத்தெடுப்பு முக வளமை ஆகியவற்றுடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ள குழந்தை தத்தெடுப்பு குறித்த விழிப்புணர்வு பயிலரங்கு புதுதில்லியில் நடைபெற்றது.
சட்டப்பூர்வத் தத்தெடுப்பு, பாதுகாப்பான குழந்தைப் பருவம், பாதுகாப்பான எதிர்காலம் என்ற கருப்பொருளில் இந்த பயிலரங்கு நடைபெற்றது.
இந்த பயிலரங்கில் குழந்தைகள் தத்தெடுப்பு வள முகமையின் தலைமைச் செயல் அதிகாரி திருமதி பாவனா சக்சேனா தில்லி அரசின் பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை செயலளார் திருமதி ரஷ்மி சிங் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
சட்டப்பூர்வமான, வெளிப்படையான குழந்தையை மையமாக கொண்ட தத்தெடுப்பு செயல்முறைக் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் சட்ட விரோதத் தத்தெடுப்பு முறைகளால் ஏற்படும் விளைவுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் நடைபெற்ற இந்த பயிலரங்கில் 200-க்கும் அதிகமானோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் பேசிய குழந்தைத் தத்தெடுப்பு வள மையத்தின் தலைமைச் செயல் அதிகாரி திருமதி பாவனா சக்சேனா சட்டவிரோதத் தத்தெடுப்பு முறைகளிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் வகையில் போதிய முன்னெச்சரிக்கையும், விழிப்புணர்வும் அவசியம் என்று வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2309010®=3&lang=1
***
SS/SV/SM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2309116)
வருகையாளர் எண்ணிக்கை : 12