ஊரக வளர்ச்சி அமைச்சகம்
வாழ்வாதாரங்களில் பெண்களின் தலைமைத்துவம், செயல்பாட்டுத் திறனை வலுப்படுத்துவதுக் குறித்த கருத்தரங்கு
இடுகை இடப்பட்ட நாள்:
11 SEP 2026 9:52AM by PIB Chennai
மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தீன்தயாள் அந்த்யோதயா திட்டத்தின் தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம், பாலின சமத்துவத்தை முன்னெடுக்கும் நிறுவனத்துடன் இணைந்து வாழ்வாதாரங்களில் பெண்களின் தலைமைத்துவம், செயல்பாட்டு திறனை மேம்படுத்துவது குறித்த ஏழாவது பாலின சமத்துவக் கருத்தரங்கை நடத்தியது.
இந்த கருத்தரங்கில் நாடு முழுவதிலும் இருந்து மகளிர் சுய உதவிக் குழுக்கள், மாநில ஊரக வாழ்வாதார இயக்க பணியாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள், துறைச் சார்ந்த நிபுணர்கள், களப்பணியாளர்கள் என 6 லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.
இந்த கருத்தரங்கில் சிறப்புரையாற்றிய மத்திய ஊரக அமைச்சகத்தின் செயலாளர் திரு ரோஹித் கன்சால், 2021 ஏப்ரல் மாதம் 1,400 பங்கேற்பாளர்களுடன் தொடங்கிய இந்த கருத்தரங்கு 2025 செப்டம்பரில் 6 லட்சம் பங்கேற்பாளர்களைக் கொண்டுள்ளது என்றும், இது பெண்களுக்கான உரிமை மற்றும் தலைமைத்துவ பண்பு வளர்ந்து வருவதைப் பிரதிபலிப்பதாக உள்ளது என்றும் கூறினார்.
உலக நாடுகளுக்கு முன்மாதிரியாக திகழும் பெண்களால் வழிநடத்தப்படும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் வலிமையை அவர் வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2309005®=3&lang=1
***
SS/SV/SM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2309115)
வருகையாளர் எண்ணிக்கை : 7