பிரதமர் அலுவலகம்
பிரிக்ஸ் உச்சி மாநாட்டுக்கு முன்னதாக நேர்மறையான, அர்த்தமுள்ள விவாதங்களின் முக்கியதுவத்தை எடுத்துரைக்கும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
11 SEP 2026 9:00AM by PIB Chennai
தில்லியில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளதாக பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உலகின் நலனுக்காக வழிநடத்தப்படும் பல்வேறு விவகாரங்களில் நேர்மறையான, அர்த்தமுள்ள விவாதங்களுக்கு இந்த உச்சி மாநாடு சான்றாக இருக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான சமஸ்கிருத நீதிமொழியையும் பிரதமர் பகிர்ந்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
ஒரு நபர் எப்பொழுதும் நல்ல பண்புகளைக் கொண்ட நபர்களிடையே வாழ்ந்து அவர்களது நட்பை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை இந்த சமஸ்கிருத நீதிமொழி உணர்த்துகிறது. பரஸ்பர நல்லெண்ணம், நட்புறவு ஆகியவை அமைதி, ஒத்துழைப்பை வலுப்படுத்துகின்றன. எனவே கலந்துரையாடல்களில் நற்பண்பு கொண்ட நபர்களுடன் நட்புறவை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
***
(Release ID: 2308995)
SS/SV/SM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2309112)
வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam