அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
பக்கிரா ஏரியிலிருந்து கிடைக்கும் வண்டல் மண், மத்திய கங்கைச் சமவெளியின் நீர் வள மேலாண்மைக்கு உதவும்
இடுகை இடப்பட்ட நாள்:
10 SEP 2026 4:41PM by PIB Chennai
சந்த் கபீர் நகரில் உள்ள பக்கீரா ஏரிக்குக் கீழே உள்ள வண்டல்களில் 25,000 ஆண்டுகளாகக் குவிந்துள்ள காந்தத் தாதுக்களை அளவிட்ட ஒரு புதிய ஆய்வு, கடந்த கால பருவநிலை மாற்றங்களையும், அவை வட இந்தியாவில் மழைப்பொழிவு, வானிலைச் சிதைவு, வண்டல் போக்குவரத்து, ஏரி செயல்முறைகள் ஆகியவற்றை எவ்வாறு பாதித்துள்ளன என்பதையும் கண்டறிய உதவியுள்ளது.
இது, எதிர்காலப் பருவமழையின் போக்கைக் கணிக்க மேம்பட்ட பருவநிலை மாதிரிகளுக்கு வழிவகுப்பதோடு, பக்கிரா ஏரி ஒரு அங்கமாக உள்ள மத்திய கங்கைச் சமவெளியில் சிறந்த நீர் வள மேலாண்மைக்கும் உதவக்கூடும்.
மத்திய கங்கைச் சமவெளி, கோடை பருவமழையால் பாதிக்கப்படும் மிக முக்கியமான பிராந்தியங்களில் ஒன்றாகும். மேலும் இது விவசாய நடைமுறைகளின் அடிப்படையில் முக்கியத்துவம் வாய்ந்தது.
அறிவியல், தொழில்நுட்பத் துறையின் ஒரு தன்னாட்சி நிறுவனமான பிர் பல் சாஹ்னி தொல்லுயிரியல் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள், பக்கீரா ஏரியின் வண்டல்களை ஆராய்ந்தனர். அதன் அடிப்படையில் இந்த தகவல்கள் கிடைத்தன.
பருவநிலை மாதிரிகளை மேம்படுத்துவதற்கும், எதிர்காலப் பருவமழையின் போக்கைக் கணிப்பதற்கும், மாறிவரும் மழைப்பொழிவு முறைகளுக்கு ஏற்ப ஆறு, ஏரி அமைப்புகள் எவ்வாறு பிரதிபலிக்கின்றன என்பதைப் புரிந்துகொள்வதற்கும் இந்த ஆய்வுத் தகவல்கள் மதிப்புமிக்க அடிப்படைத் தகவல்களை வழங்குகின்றன.
வெளியீட்டு இணைப்பு: https://doi.org/10.1016/j.palaeo.2026.114028
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2308732®=3&lang=1
***
TV/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2309107)
வருகையாளர் எண்ணிக்கை : 8