சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் உரிய ஆலோசனையின் மூலம் மீட்பு

இடுகை இடப்பட்ட நாள்: 10 SEP 2026 3:13PM by PIB Chennai

ஆல்கஹாலை உபயோகிப்பது தனிநபருடைய உடல்நலத்தையும், மனநலத்தையும், குடும்ப உறவுகளையும், நிலையான வாழ்வாதாரத்தைப் பராமரிக்கும் திறன் ஆகியவற்றை படிப்படியாக பாதிக்கிறது. அவர்களுக்கு உரிய நேரத்தில் அளிக்கப்படும் ஆலோசனை, முறையான மறுவாழ்வு நடவடிக்கைகள், குடும்பத்தின் தொடர்ச்சியான ஆதரவு ஆகியவை தனிநபர்கள் அதில் அடிமையாவதிலிருந்து மீண்டு, நம்பிக்கையுடனும், கண்ணியத்துடனும் தங்களுடைய வாழ்க்கையை மீண்டும் கட்டமைக்க உதவும்.

போதைப்பொருள் பயன்பாட்டை குறைப்பதற்கான தேசிய செயல்திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் ஆதரவிற்கு ஒரு சிறந்த உதாரணமாக தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 31 வயதான கவி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) திகழ்கிறார். அவர் சுமார் ஆறு ஆண்டுகளாக மதுவிற்கு அடிமையாக இருந்து பின்பு அதிலிருந்து மீண்டு தற்போது ஆரோக்கியமான, நிலையான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். ஆலோசனை, மறுவாழ்வு, தொடர்ச்சியான கண்காணிப்பு ஆகியவை அவர் மதுவிலிருந்து மீண்டதற்கு முக்கிய காரணமாகும்.

முன்னதாக, மது அடிமைத்தனத்தால் அவர் பணிக்கு செல்வது, பணியில் செயல்திறன் ஆகியவற்றில் பாதிப்பை ஏற்படுத்தியது. அதனால், குடும்ப ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் நெருக்கடி அதிகரித்தது. இந்நிலையில் 2025 அக்டோபர் 7 அன்று, தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்திலுள்ள போதைக்கு அடிமையானவர்களுக்கான ஒருங்கிணைந்த மறுவாழ்வு மையத்தில் சேர்ந்து உரிய ஆலோசனையும் வழிகாட்டுதலும் பெற்று போதை அடிமைத்தனத்திலிருந்து மீண்டு பயனடைந்தார். தற்போது அவர் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2308671&reg=3&lang=1

***

TV/IR/PS/SU


(வெளியீட்டு அடையாள எண்: 2308816) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati