பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவின் மகாசாகர் திட்டத்திற்கு வலுசேர்க்கும் சமுத்ர லக்ஷ்னா கடற்படைப் பயிற்சி

இடுகை இடப்பட்ட நாள்: 10 SEP 2026 2:36PM by PIB Chennai

இந்திய கடற்படை – ராயல்  மலேசியா கடற்படை இடையே நடைபெறும் சமுத்ரா லக்ஷ்மனா என்ற இருதரப்பு கடல்சார் பயிற்சியின் 4-வது பதிப்பில் பங்கேற்பதற்காக இந்திய கடற்படை கப்பலான ஐஎன்எஸ் மைசூர் 2026 செப்டம்பர் 9 அன்று மலேசியாவின் லூமுட் சென்றடைந்தது.

அங்கு ராயல் மலேசியா கடற்படை அதிகாரிகளும் மலேசியாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் அன்புடன் அவர்களை வரவேற்றனர்.

இருதரப்பு கப்பல் பார்வையிடல், செயல்பாட்டு உரையாடல், விளையாட்டு உள்ளிட்ட நிகழ்வுகள் துறைமுகம் மற்றும் கடற்பகுதியில் நடைபெற உள்ளது. இந்நடவடிக்கைகள் இருநாட்டு கடற்படையினருக்கும் தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்துகொள்ளவும், சிறந்த பரஸ்பர புரிதலுக்கும் வாய்ப்புகளை அளிக்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2308653&reg=3&lang=1

***

TV/IR/PS/SU


(வெளியீட்டு அடையாள எண்: 2308798) வருகையாளர் எண்ணிக்கை : 12
இந்த வெளியீட்டை படிக்க: English , Gujarati , Urdu , हिन्दी , Bengali , Bengali-TR , Kannada