நித்தி ஆயோக்
azadi ka amrit mahotsav

இந்தியாவின் அடுத்த தலைமுறை சீர்திருத்தங்களை வரையறுக்கும் அம்சமாக கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் – நித்தி ஆயோக் உறுப்பினர் திரு ராஜீவ் கௌபா

இடுகை இடப்பட்ட நாள்: 10 SEP 2026 12:08PM by PIB Chennai

உலகளாவிய நிதி தொழிநுட்ப திருவிழா 2026-ல் பங்கேற்ற நித்தி ஆயோக் உறுப்பினர் திரு ராஜீவ் கௌபா, ஒழுங்குமுறையிலிருந்து மாற்றம் வரை: இந்தியாவின் அடுத்த தலைமுறை சீர்திருத்த கட்டமைப்பை உருவாக்குதல் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

இதில், இந்தியாவின் ஒழுங்குமுறை நடவடிக்கை, நிதி தொழில்நுட்பத் துறையில் புதுமைக் கண்டுபிடிப்பு மற்றும் மேற்பார்வைக்கிடையேயான சமநிலை தேவை, வளர்ச்சியடைந்த இந்தியா தொலைநோக்கு பார்வையை அடைவதற்கான வளர்ச்சியை தக்கவைப்பதற்குத் தேவையான முறைப்படுத்தப்பட்ட மாற்றங்கள் குறித்து உரையாடல் நடைபெற்றது.

கடந்த 10 ஆண்டுகளின் சீர்திருத்தங்கள் குறித்து உரையாற்றிய திரு கௌபா, சரக்கு மற்றும் சேவை வரி, திவால் மற்றும் நொடித்தல் சட்டம், தாராளமயமாக்கப்பட்ட வெளிநாட்டு முதலீடு முறை ஆகிய நடவடிக்கைகள் பொருளாதாரத்தை மறுவடிவமைத்து பாதுகாப்பு, விண்வெளி, அணுசக்தி உள்ளிட்ட துறைகளில் தனியார் நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக  குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2308600&reg=3&lang=1

***

TV/IR/PS/SU


(வெளியீட்டு அடையாள எண்: 2308632) வருகையாளர் எண்ணிக்கை : 11
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Manipuri , Gujarati