ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தில்லி ரயில்வே கோட்டக் கட்டுப்பாட்டு அலுவலகத்தில், பாதுகாப்பு, செயல்பாடுகள், நேரக்கட்டுப்பாடு, பொதுமக்களின் குறைகள் குறித்து, ரயில்வேத் துறை இணையமைச்சர் திரு வி சோமண்ணா ஆய்வு செய்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 09 SEP 2026 5:50PM by PIB Chennai

தில்லி கோட்டக் கட்டுப்பாட்டு அலுவலகத்தில் பாதுகாப்பு, செயல்பாடுகள், நேரக்கட்டுப்பாடு, பொதுமக்களின் குறைகள் குறித்து, ரயில்வேத் துறை  இணையமைச்சர் திரு வி சோமண்ணா ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது, கட்டுப்பாட்டு அலுவலகத்தின் அதிகாரிகள்,  பணியாளர்களுடன் அமைச்சர் கலந்துரையாடினார். மேலும், தில்லி கோட்ட ரயில்வே மேலாளர் திரு புஷ்பேஷ் ஆர் திரிபாதி மற்றும் பிரதிநிதிகளுடன் அவர் விரிவான ஆலோசனை நடத்தினார்.

ஒரு ரயில்வே கோட்டத்தின் முக்கிய மையமாக இந்தக் கட்டுப்பாட்டு அலுவலகம் செயல்படுகிறது. இங்கு ரயில்களின் இயக்கம், பராமரிப்புத் திட்டமிடல், மேற்பார்வை, பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகள் போன்ற செயல்பாடுகள் நாள்தோறும் கண்காணிக்கப்படுகின்றன. இப்பணிகள் 24 மணி நேரமும் ஓய்வின்றி தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன.

இந்திய ரயில்வே கட்டமைப்பில், மிகவும் சிக்கலான நிர்வாகப் பிரிவுகளில் ஒன்றாக, தில்லி ரயில்வே கோட்டம் செயல்பட்டு வருகிறது. அதிகாரிகள்,  பணியாளர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போது, ரயில்வே செயல்பாடுகளில் உள்ள சிக்கல்களை அமைச்சர் புரிந்துகொண்டதுடன், மேலும், மேம்படுத்தப்பட வேண்டிய பகுதிகளைக் கண்டறிய உதவிடும்  வகையில் களப்பணியாளர்களிடமிருந்து முக்கியக் கருத்துகளையும் அறிந்துகொண்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2308381&reg=3&lang=1

(Release ID: 2308381)

****

TV/SV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2308499) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Kannada