சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய ஃபுளோரோசிஸ் தினத்தையொட்டி, மத்திய சுகாதார அமைச்சகம் பயிலரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தது

இடுகை இடப்பட்ட நாள்: 09 SEP 2026 5:11PM by PIB Chennai

தேசிய ஃபுளோரோசிஸ் தினத்தையொட்டி, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் பயிலரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தது. பற்களில் கறைகளை ஏற்படுத்தக்கூடிய ஃபுளோரோசிஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டிற்கான தேசிய திட்டத்தின் கீழ் ஃபுளோரோசிஸ் தடுப்பு, முன்கூட்டியே கண்டறிதல், மேலாண்மை மற்றும் கட்டுப்பாட்டை வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.

இதில் ஜல் சக்தி அமைச்சகம், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம், எய்ம்ஸ், தேசிய பல் மருத்துவ ஆணையம், மாநில ஒருங்கிணைப்பு அலுவலர்கள்  உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஃபுளோரோசிஸ் பாதிப்பை திறம்பட தடுத்து கட்டுப்படுத்துவதற்கான பல்வேறு துறை நடவடிக்கைகளை ஊக்குவித்தல் குறித்து கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2308345&reg=3&lang=1

****

TV/IR/GS/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2308484) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी