தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
கட்டுமான தொழிலாளர்கள் மேம்பாடு தொடர்பான மாநாடு மும்பையில் 2026 செப்டம்பர் 11 மற்றும் 12ம் தேதி நடைபெற உள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
09 SEP 2026 12:40PM by PIB Chennai
மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், மகாராஷ்டிரா மாநில அரசு சார்பில், தேசிய அளவிலான கட்டுமான தொழிலாளர்கள் மாநாடு மும்பையில் 2026 செப்டம்பர் 11 மற்றும் 12ம் தேதி நடைபெற உள்ளது. மத்திய தொழிலாளர், வேலைவாய்ப்புத்துறை, இளைஞர்நலன், விளையாட்டுத்துறை அமைச்சர் திரு.டாக்டர் மான்சுக் மாண்டவியா தலைமையில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் தொழிலாளர், வேலைவாய்ப்பு, சிறுகுறு நடுத்தர தொழில்கள்துறை இணை அமைச்சர் திரு.ஷோபா கரந்த்லஜே, கட்டுமான தொழிலாளர்கள் நலவாரிய தலைவர்கள், செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
இந்தியாவில் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் கட்டுமான துறையை பலப்படுத்துவது, கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தை மேம்படுத்துவது, நலவாரியத்தில் பெயர்களை பதிவு செய்வது, கட்டுமான தொழிலாளர்களுக்கான நல நிதியை கண்காணிப்பது உள்ளிட்டவை குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது. குறிப்பாக, மாநில அரசின் கீழ் இயங்கும் கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தை வெற்றிகரமாக கொண்டு செல்வது குறித்தும் இந்த மாநாட்டில் ஆலோசிக்கப்பட உள்ளது.
மும்பையில் 2 நாட்கள் நடைபெறவுள்ள இம்மாநாட்டில், சர்வதேச அளவில் தொழிலாளர்களின் திறனை உயர்த்துவது, வேலைவாய்ப்புகள் உள்ளிட்டவை குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. கட்டுமான தொழிலாளர்களின் நலன், சமூக பாதுகாப்பை உயர்த்துவதே இந்த மாநாட்டின் நோக்கமாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2308164®=3&lang=1
***
SS/LN/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2308464)
வருகையாளர் எண்ணிக்கை : 9