விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வேளாண் அமைப்புகளின் முக்கியத் தலைவர்களுடன் மத்திய வேளாண் அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சௌஹான் நாளை ஆலோசனை நடத்துகிறார்

இடுகை இடப்பட்ட நாள்: 09 SEP 2026 5:03PM by PIB Chennai

போலி, தரமற்ற விதைகளால் ஏற்படும் இழப்புகளில் இருந்து நாட்டின் விவசாயிகளைப் பாதுகாக்கும் நோக்கில், புதிய, கடுமையான விதைச் சட்டத்தை அறிமுகப்படுத்த மத்திய அரசு தயாராகிறது. செழுமைமிக்க, தன்னிறைவுப் பெற்ற வேளாண் சமூகத்தை உருவாக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியான இந்தச் சட்ட முன்மொழிவு அமைந்துள்ளது. இந்தச் சட்ட முன்மொழிவை இறுதி செய்வதற்கு முன்னதாக மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சௌஹான் செப்டம்பர் 10 அன்று புதுதில்லியில் நாடு முழுவதும் உள்ள முக்கிய வேளாண் அமைப்புகளின் மூத்த தலைவர்களுடன் உயர்மட்ட ஆலோசனை மேற்கொள்கிறார்.

விவசாயிகளின் கள அனுபவங்கள், ஆலோசனைகள், கவலைகள் ஆகியவற்றின் அடிப்படையில் விதைச் சட்ட வரைவில் இடம்பெறச் செய்வது இந்த ஆலோசனைக் கூட்டத்தின் நோக்கமாகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2308335&reg=3&lang=1

****

TV/IR/GS/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2308455) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati , Kannada