தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
6ஜி தொழில்நுட்பத்தில், கம்பி வடமில்லா தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை வடிவமைக்க ஏதுவாக ஒத்த கருத்துடைய நாடுகளின் குழுவில் இந்தியா இணைந்துள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
09 SEP 2026 4:08PM by PIB Chennai
வெளிப்படைத்தன்மை, ஒன்றிணைந்து செயல்படும் திறன், பாதுகாப்பு, மீள்திறன், வளம், புதுமைக் கண்டுபிடிப்பு சார்ந்த போட்டித்தன்மை ஆகிய கொள்கைகளின் அடிப்படையில், ஆறாம் தலைமுறை (6ஜி) கம்பி வடமில்லா தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை வடிவமைக்க ஏதுவாக ஒத்த கருத்துடைய நாடுகளின் குழுவில் இந்தியா இணைந்துள்ளது என்று மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், இதனைத் தெரிவித்துள்ளார்.
6ஜி தொழில்நுட்பத்தில், உலகின் முன்னணி நாடாக இந்தியாவை நிலைநிறுத்தப்பட வேண்டும் என்று திரு ஜோதிராதித்ய சிந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருவதை மத்திய தகவல் தொடர்புத் துறை இணையமைச்சர் டாக்டர் சந்திர சேகர் பெம்மாசானி சுட்டிக்காட்டியுள்ளார்.
இத்தகைய தொலைநோக்குப் பார்வையுடன் மேற்கொள்ளப்படும் முயற்சிகள், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் நாடாக இருந்த நிலையிலிருந்து, தொழில்நுட்பத் தரநிலைகளை நிர்ணயிக்கும் நாடாக இந்தியா உருவெடுப்பதற்கான அவசியத்தை இது எடுத்துக்காட்டுவதாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
கனடா, கோஸ்டாரிகா, செக் குடியரசு, டென்மார்க், எஸ்டோனியா, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், ஹோண்டுராஸ், இத்தாலி, ஜப்பான், லாட்வியா, நார்வே, பராகுவே, கொரியக் குடியரசு, ருமேனியா, ஸ்வீடன், பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் கூட்டமைப்பில் இந்தியாவும் இணைந்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2308285®=3&lang=1
****
TV/SV/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2308452)
வருகையாளர் எண்ணிக்கை : 8