சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அரியானா மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரிய செயல்பாடுகளை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம்

இடுகை இடப்பட்ட நாள்: 09 SEP 2026 12:39PM by PIB Chennai

அரியானாவில் காற்றின் தரத்தை கண்காணிப்பது தொடர்பாக, காற்று தர மேலாண்மை ஆணையத்தின் தலைவர் ராஜேஷ் வர்மா, அரியானா மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்துடன் ஆலோசனை நடத்தினார். அப்போது 2026 ஜூன் 19-ம் தேதி முதல் 2026 ஜூன் 22-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் காற்று தர மேலாண்மை ஆணையம், அரியானாவின் பானிபட், சோனிபட், பரிதாபாத், குருகிராம் ஆகிய பகுதிகளில் ஆய்வு நடத்தியதில், மாசு தரக்கட்டுப்பாட்டை கண்காணிக்கும் கருவிகள் பல செயல்படாமல் இருந்தது தெரியவந்தது.

அங்குள்ள பெரும்பாலான வெப் கேமரா, மொபைல் இணைப்புகள் முழுமையாக செயல்படாமல் இருப்பது கண்டறியப்பட்டது. குறைந்தளவு இணைப்புகளே இயங்கி வருவதும் தெரியவந்தது. இந்நிலையில், மாசுக்கட்டுப்பாடு கண்காணிப்பு கருவிகளை  முறையாக பராமரிக்க வேண்டும் என அரியானா மாநில மாசுக்கட்டுபாட்டு வாரியத்துக்கு, காற்று தர மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியது. மாசுக்கட்டுபாடு விஷயத்தில் எவ்வித சமரசமும் கூடாது என்றும், தவறுகளை சரிசெய்யாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தது. அரியானா மாநில மாசு கட்டுப்பாடு வாரியத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.      

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2308163&reg=3&lang=1

****

TV/LN/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2308440) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी