நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளுக்கான 27-வது தேசிய இளையோர் நாடாளுமன்றப் போட்டி பரிசளிப்பு விழா: மத்திய அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு தலைமை

இடுகை இடப்பட்ட நாள்: 09 SEP 2026 11:52AM by PIB Chennai

ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளுக்கான 2025-26-ம் ஆண்டுக்கான 27-வது தேசிய இளைஞர் நாடாளுமன்றப் போட்டிக்கான பரிசளிப்பு விழா, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள ஜிஎம்சி பாலயோகி அரங்கில் நாளை (செப்டம்பர் 10, 2026) பிற்பகல் 3 மணியளவில் நடைபெறுகிறது. இந்த விழாவுக்கு மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு தலைமை வகித்து, வெற்றி பெற்ற மாணவ, மாணவியர் மற்றும் பள்ளிகளுக்குப் பரிசுகளை வழங்குகிறார். இப்போட்டியில் முதலிடம் பிடித்த மணிப்பூர் உக்ருல்-1 பிஎம் ஸ்ரீ ஜவஹர் நவோதயா வித்யாலயா மாணவர்கள் இளையோர் நாடாளுமன்ற அமர்வை நேரில் நிகழ்த்திக் காட்ட உள்ளனர்.

நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகம் கடந்த 30 ஆண்டுகளாக இப்போட்டிகளை நடத்தி வருகிறது. 2025-26-ம் ஆண்டில் நாடு முழுவதும் உள்ள 8 பிராந்தியங்களைச் சேர்ந்த 100 பள்ளிகள் இதில் பங்கேற்றன. இளம் தலைமுறையினரிடையே சுய ஒழுக்கம், ஜனநாயக நெறிமுறைகள், நாடாளுமன்ற நடைமுறைகள், விவாதத் திறன், தலைமைப் பண்பு, பேச்சாற்றல் ஆகியவற்றை வளர்ப்பதை இந்தப் போட்டி நோக்கமாகக் கொண்டுள்ளது.

இப்போட்டியில் முதலிடம் பிடித்த மணிப்பூர் உக்ருல்-1 பள்ளிக்கு சுழற்கேடயம் வழங்கப்படுகிறது. மேலும் முதலிடம் பிடித்த கேரளத்தின் கொல்லம், இமாச்சலப் பிரதேசத்தின் தியோக், ராஜஸ்தானின் சூரத்கர், சத்தீஸ்கரின் மல்ஹார், குஜராத்தின் வல்சாத், மேற்கு வங்கத்தின் புருலியா, உத்தரகாண்டின் உதம் சிங் நகர் ஆகிய 7 ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளுக்கும் சிறப்பு விருதுகள் வழங்கப்பட உள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2308144&reg=3&lang=1

***

TV/PD/RJ   


(வெளியீட்டு அடையாள எண்: 2308174) வருகையாளர் எண்ணிக்கை : 5
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati