பாதுகாப்பு அமைச்சகம்
இந்தியா- ஜப்பான் விமானப் படை வீரர்களின் கூட்டுப்பயிற்சி ஜோத்பூரில் நடைபெறுகிறது
இடுகை இடப்பட்ட நாள்:
08 SEP 2026 5:20PM by PIB Chennai
இந்திய விமானப் படை, ஜப்பான் விமானப் பாதுகாப்பு படை ஆகியவை இணைந்து ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் உள்ள விமானப் படை தளத்தில் கூட்டு பயிற்சி மேற்கொள்கின்றன. வீர் கார்டியன்-2026 என்ற பெயரில் நடைபெறும் கூட்டு பயிற்சி 2026 செப்டம்பர் 9-ம் தேதி முதல் செப்டம்பர் 22-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்தியா, ஜப்பான் விமானப்படை வீர்களின் இந்த கூட்டுப் பயிற்சியில், இந்தியாவின் பிரபல போர் விமானங்களான தேஜஸ், சுகோய்-30 எம்கேஐ, ரஃபேல் ஆகியவை பங்கேற்கின்றன. இதேபோல் ஜப்பான் விமானப் படையை சேர்ந்த எஃப்-2 விமானமும் பயிற்சியில் இணைந்துள்ளன.
14 நாட்கள் நடைபெறும் இந்த கூட்டுப் பயிற்சியில், இரு நாட்டு வீரர்களும் தங்களது திறமைகளை வெளிப்படுத்துவதுடன், போர் பயிற்சி முறைகள் குறித்து பரஸ்பரம் பகிர்ந்துகொள்ள உள்ளனர். விமானப்படையில் பாதுகாப்பு அம்சங்கள், தொழில்நுட்பம் ஆகியவை குறித்தும் இருதரப்பினரும் எடுத்துரைக்கின்றனர். இதன்மூலம், இந்தியா, ஜப்பான் விமானப்படை மேம்படுவதுடன், இருநாடுகள் இடையேயான நீண்டகால நட்புறவு மேலும் வலுப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2307890®=3&lang=1
***
TV/LN/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2308153)
வருகையாளர் எண்ணிக்கை : 14