பாதுகாப்பு அமைச்சகம்
இந்திய விமானப் படையின் ட்ரோனத்தான் 2026
இடுகை இடப்பட்ட நாள்:
08 SEP 2026 3:12PM by PIB Chennai
ஆளில்லா விமான அமைப்புகள் (UAS) மற்றும் ஆளில்லா விமான எதிர்ப்பு அமைப்புகள் (CUAS) ஆகியவற்றில் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் தங்களது திறன்களையும் தொழில்நுட்ப முன்னேற்றங்களையும் காட்சிப்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்கும் நோக்கில், இந்திய விமானப் படை 'ட்ரோனத்தான்-2026' (Dronathon-2026) நிகழ்வை நடத்துகிறது. வளர்ந்து வரும் ட்ரோன் மற்றும் ட்ரோன் எதிர்ப்பு தொழில்நுட்பங்களை அவற்றின் செயல்பாட்டுச் செயல்முறை விளக்கங்களுடன் சம்பந்தப்பட்ட பங்குதாரர்கள் நேரில் பார்வையிடுவதற்கும், இருதரப்பு அனுபவங்களையும் கற்றல்களையும் பரிமாறிக் கொள்வதற்கும் இந்த நிகழ்வு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு 2026 செப்டம்பர் 14 முதல் 16 வரை ஜெய்சால்மரில் உள்ள பொக்ரான் களத்தில் நடைபெற உள்ளது. இதில் கண்காட்சி மற்றும் நேரடி செயல்முறை விளக்கங்கள் இடம்பெறும். இது தற்காலத் தீர்வுகளைக் கண்டறியவும், அவற்றின் போர் செயல்திறனை மதிப்பீடு செய்யவும் உதவும். கண்காணிப்பு மற்றும் உளவுத்துறை, தானியங்கி செயல்பாடுகள், ஸ்வர்ம் (திரள்) தொழில்நுட்பங்கள் மற்றும் மின்னணுப் போர்முறை ஆகியவை இக்கண்காட்சியின் முக்கிய அம்சங்களாகும்.
தற்சார்பு இந்தியா என்ற தேசிய தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, தொழில் வல்லுநர்கள், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களை ஒருங்கிணைப்பதன் மூலம் உள்நாட்டுப் பாதுகாப்பு சூழலமைப்பை வலுப்படுத்துவதை ட்ரோனேத்தான்-2026 நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்தகைய தொடர் முயற்சிகள் மூலம், தொழில்நுட்பரீதியாக மேம்பட்ட, தற்சார்பு மற்றும் எதிர்காலத் தேவைகளுக்கு ஆயத்தமான பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்குவதில் இந்திய விமானப் படை முழு உறுதியுடன் செயல்பட்டு வருகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2307811®=3&lang=1
***
TV/SE/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2308095)
வருகையாளர் எண்ணிக்கை : 10