அணுசக்தி அமைச்சகம்
மத்தியப் பிரதேசத்தில் விதிஷா அரசு மருத்துவக் கல்லூரியில் புற்றுநோய் பராமரிப்பு மையத்தை மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் திறந்து வைத்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
08 SEP 2026 3:37PM by PIB Chennai
நாட்டில் அதிகரித்து வரும் புற்றுநோய் பாதிப்பைக் கருத்தில் கொண்டு, பெரிய நகரங்களைக் கடந்து புற்றுநோய் பராமரிப்பு வசதிகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்று மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் அணுசக்தித் துறை மற்றும் டாடா நினைவு மையம் (TMC) இணைந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் புற்றுநோய் சிகிச்சைக்கான கட்டமைப்பை விரிவுபடுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார். இதன் ஒரு பகுதியாக, மத்தியப் பிரதேசத்தின் விதிஷாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் புற்றுநோய் பராமரிப்பு மையத்தை அவர் திறந்து வைத்தார்.
2030-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 20 லட்சம் புதிய புற்றுநோய் பாதிப்புகள் கண்டறியப்படலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், இதனை எதிர்கொள்ள முன்கூட்டியே நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை அளிக்கும் கட்டமைப்பை மேம்படுத்துவது அவசியம் என்று குறிப்பிட்டார். மேலும், உணவு கலப்படம் போன்ற முறைகேடுகளைத் தவிர்க்க பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
விதிஷா மருத்துவக் கல்லூரியில் தொடங்கப்பட்டுள்ள இந்த மையம், கதிர்வீச்சு சிகிச்சை, மேம்பட்ட நோய் கண்டறிதல் மற்றும் பயிற்சி பெற்ற மருத்துவப் பணியாளர்களுடன் படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என்று தெரிவித்த அவர், இந்த மருத்துவக் கல்லூரியின் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மும்பை ஏசிடிஆர்இசி மையத்தில் சிறப்பு புற்றுநோய் சிகிச்சைப் பயிற்சி பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டார். எதிர்காலத்தில் லினியர் ஆக்சிலேட்டர் (LINAC) வசதியுடன் கூடிய கதிர்வீச்சு சிகிச்சையும் இங்கு உருவாக்கப்படும் என்று குறிப்பிட்ட அமைச்சர், மக்களுக்கு வீடுகளுக்கு அருகிலேயே தரமான புற்றுநோய் சிகிச்சையை வழங்குவதே அரசின் முக்கிய நோக்கமாகும் என்று தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2307824®=3&lang=1
***
TV/PD/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2307977)
வருகையாளர் எண்ணிக்கை : 17