திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
தொழிற்பயிற்சி நிறுவனங்களின் மேம்பாட்டுக்கு ரூ.735.70 கோடி நிதி ஒதுக்கீடு: ஒப்புதல் வழங்கிய தேசிய உயர்மட்ட குழு
இடுகை இடப்பட்ட நாள்:
08 SEP 2026 1:25PM by PIB Chennai
திறன் மற்றும் வேலைவாய்ப்பு மூலம் அதிகாரம் அளிப்பதற்கான பிரதமரின் திட்டம் (PM-SETU) மூலம் தொழிற்பயிற்சி நிலையங்களை (ஐடிஐ) மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் மத்திய திறன்மேம்பாடு, தொழில்முனைவோர் அமைச்சகசெயலாளர் தேபாஸ்ரீ முகர்ஜி தலைமையில் நடைபெற்றது. இதில் இந்திய தொழிற்பயிற்சி நிறுவனங்களை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, ராஜஸ்தான், உத்தரபிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ள தொழிற்பயிற்சி நிறுவனங்களின் உள்கட்டமைப்பை நவீனப்படுத்துவதற்காக ரூ.735.70 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கு தேசிய உயர்மட்டக் குழு ஒப்புதல் வழங்கியது.
திறன் மற்றும் வேலைவாய்ப்பு மூலம் அதிகாரம் அளிப்பதற்கான பிரதமரின் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும்9 தொழிற்பயிற்சி நிறுவனங்கள் ரூ.2,171 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட உள்ளது.
இதில் முதற்கட்டமாக ராஜஸ்தானில் உள்ள தொழிற்பயிற்சி நிறுவனங்களுக்கு ரூ.241 கோடியும், தெலங்கானா மாநிலத்திற்கு ரூ.254.30 கோடியும், உத்தரபிரதேசத்திற்கு ரூ.240.40 கோடியும் முதலீடு செய்யப்பட உள்ளன.
தொழிற்பயிற்சி நிறுவனங்களின் உள்கட்டமைப்பு, மாணவர்களுடைய பயிற்சியின் தரத்தை மேம்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகள் இணைந்து, இத்திட்டத்தை செயல்படுத்த உள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2307775®=3&lang=1
***
TV/LN/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2307956)
வருகையாளர் எண்ணிக்கை : 11