அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

குவாண்டம் தொழில்நுட்ப சிக்கல் இழப்பைத் தவிர்ப்பதற்கான வழி முறையை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்

இடுகை இடப்பட்ட நாள்: 07 SEP 2026 3:36PM by PIB Chennai

சரியான தருணத்தில் மேற்கொள்ளப்படும் மாற்றியமைக்கும் செயல்பாட்டின் மூலம், குவாண்டம் சிக்கல்களிலிருந்து நீண்ட காலப் பாதுகாப்பு நடைமுறைகளுக்கான வழிமுறையை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். குவாண்டம் அமைப்புகளில், எந்த வகையான செயல்பாடுகளைப் பயன்படுத்துவது என்பது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ, அதே அளவு செயல்படுவதற்கான தருணம் என்பதும் முக்கியதத்துவம் வாய்ந்தது என்பதை இது நிரூபிக்கும் வகையில் அமைந்துள்ளது.

வன்பொருளில் எவ்வித மாற்றமும் இன்றி, எதிர்கால குவாண்டம் தொழில்நுட்பக் கணினிகளுக்குள் இருக்கும் பலவீனமான  இணைப்புகள் நீண்ட காலம் நிலைத்திருக்க இது உதவிடும்.

சிக்கல் என்பது ஒரு துகளின் நிலையை, தொலைவில் உள்ள மற்றொரு துகளுடன் பிணைக்கும் ஒரு பண்பு ஆகும். குவாண்டம் தொழில்நுட்பம் சார்ந்த அமைப்புகளில், சிக்கல் ஒரு மிக இன்றியமையாத வளமாகும். இருப்பினும், சுற்றுச்சூழலுடன் தொடர்பு கொள்ளும்போது அவை சிதைந்து விடுவதற்கான அல்லது பலவீனமடைவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2307420&reg=3&lang=1

***

TV/SV/GS   


(வெளியீட்டு அடையாள எண்: 2307746) வருகையாளர் எண்ணிக்கை : 13
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी