மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
ஜி20 புத்தாக்க அமைச்சர்கள் கூட்டத்தில் மத்திய இணையமைச்சர் திரு ஜிதின் பிரசாதா பங்கேற்பு
இடுகை இடப்பட்ட நாள்:
07 SEP 2026 5:08PM by PIB Chennai
அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் உள்ள சேப்பல் ஹில்லில் நடைபெற்ற ஜி20 புத்தாக்க அமைச்சர்கள் கூட்டத்தில் மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பம், வர்த்தகம், தொழில்துறை இணையமைச்சர் திரு ஜிதின் பிரசாதா தலைமையிலான இந்தியக் குழு பங்கேற்றது. இம்மாநாட்டில், வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்பங்கள் உற்பத்தியை அதிகரிக்கவும், பொருளாதார வாய்ப்புகளை அனைவருக்கும் விரிவுபடுத்தவும் உதவும் என்பதை அங்கீகரிக்கும் விதமாக புத்தாக்க அமைச்சர்கள் அறிக்கை ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இக்கூட்டத்தின் இடையே, ஐரோப்பிய ஆணையம், பிரான்ஸ், ஜெர்மனி, ஆப்பிரிக்க ஒன்றியம் ஆகியவற்றின் தலைவர்களுடன் செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு குறித்து திரு ஜிதின் பிரசாதா பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும், அமெரிக்க வர்த்தகச் செயலருடன் செமிகண்டக்டர்கள், தரவு மையங்கள், முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக அவர் ஆலோசனை மேற்கொண்டார். டியூக் பல்கலைக்கழகத்திற்கு நேரில் சென்று ரோபோடிக்ஸ் ஆய்வகத்தைப் பார்வையிட்ட அவர், உயர்கல்வி ஆராய்ச்சி ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து விரிவாக விவாதித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2307502®=3&lang=1
***
TV/PD/GS
(வெளியீட்டு அடையாள எண்: 2307732)
வருகையாளர் எண்ணிக்கை : 8