மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நவீன தொழில்நுட்பங்கள் மூலம் இந்தியாவில் மீன்வளர்ப்புத் துறையின் வளர்ச்சி

இடுகை இடப்பட்ட நாள்: 07 SEP 2026 3:05PM by PIB Chennai

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும், சுமார் 3 கோடி மீனவர்கள் மற்றும் மீன் வளர்ப்போரின் வாழ்வாதாரத்திற்கும் மீன்வளத் துறை முக்கியத் தூணாகத் திகழ்கிறது. உலகளவில் மீன் உற்பத்தியில் இரண்டாமிடத்திலும், இறால் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முதலிடத்திலும் இந்தியா விளங்குகிறது. இத்துறையின் ஒட்டுமொத்த மேம்பாட்டிற்காக, மத்திய அரசு 2015-ஆம் ஆண்டு முதல் பல்வேறு முதன்மைத் திட்டங்களின் கீழ் ரூ.39,272 கோடிக்கும் அதிகமான நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் பயனாக, நாட்டின் ஆண்டு மீன் உற்பத்தி 2013-14-ஆம் நிதியாண்டில் 95.79 லட்சம் டன்னாக இருந்தது, 2024-25-ல் 198 லட்சம் டன் என்ற சாதனை அளவை எட்டியுள்ளது. மேலும், கடல்சார் பொருட்களின் ஏற்றுமதி ரூ.73,890 கோடியாக உயர்ந்துள்ளது.

பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் (PMMSY) கீழ், மறுசுழற்சி மீன்வளர்ப்பு முறை (RAS) மற்றும் பயோஃப்ளாக் போன்ற நவீனத் தொழில்நுட்பங்கள் தீவிரமாக ஊக்குவிக்கப்பட்டு வருகின்றன. ரூ.4,120 கோடி மதிப்பிலான முதலீட்டின் கீழ், இதுவரை 9,467 மறுசுழற்சி மீன்வளர்ப்பு அலகுகளுக்கும், 4,573 பயோஃப்ளாக் அலகுகளுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டு, ஆண்டு முழுவதும் தொடர்ச்சியான மீன் உற்பத்தி சாத்தியமாக்கப்பட்டுள்ளது.

சுமார் 90 முதல் 95 சதவீதம் வரை தண்ணீரை மறுசுழற்சி செய்யும் இத்தொழில்நுட்பங்கள், ஜம்மு-காஷ்மீர் மற்றும் இமாச்சலப் பிரதேசம் போன்ற குளிர்பிரதேசங்களில் உயர்மதிப்புமிக்க டிரவுட் மீன் வளர்ப்பிற்கும், உவர்நீர் பகுதிகளில் ஏற்றுமதி சார்ந்த இறால் வளர்ப்பிற்கும் பெரிதும் துணைபுரிகின்றன. செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் கண்காணிப்பு அமைப்புகளுடன் இத்தொழில்நுட்பங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, 'வளர்ச்சியடைந்த இந்தியா' தொலைநோக்கு இலக்கின் கீழ் நாட்டின் நீலப் பொருளாதார வளர்ச்சி துரிதப்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2307405&reg=3&lang=1

***

TV/SE/GS


(வெளியீட்டு அடையாள எண்: 2307730) வருகையாளர் எண்ணிக்கை : 13
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Kannada , Malayalam