அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

விண்வெளித்துறையை மேம்படுத்த லக்செம்பர்க் நாட்டுடன் இந்தியா இணைந்து செயல்படும்: மத்திய அமைச்சர் திரு ஜிதேந்திர சிங்

இடுகை இடப்பட்ட நாள்: 07 SEP 2026 2:15PM by PIB Chennai

இந்தியா வருகை தந்துள்ள மேற்கு ஐரோப்பியவின் லக்செம்பர்க் நாட்டின் பொருளாதார துறை அமைச்சர் லெக்ஸ் டெல்ஸ், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் திரு ஜிதேந்திர சிங்கை சந்தித்து பேசினார். அப்போது, இருநாடுகள் இடையே விண்வெளித்துறை, செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் தொழில்நுட்பம், நவீன தொழில்நுட்பம், வர்த்தகம் உள்ளிட்டவை குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதுதொடர்பாக பேசிய அமைச்சர் திரு ஜிதேந்திர சிங், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமும், லக்செம்பர்க் விண்வெளி மையமும் இணைந்து வர்த்தக செயற்கைகோள்களை விண்ணில் செலுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது என்றார். 2035ம் ஆண்டில் இந்திய விண்வெளி ஆய்வு மையம் அமைப்பது, 2040ம் ஆண்டில் நிலவில் மனிதனை தரையிறக்குவது தொடர்பாகவும், விண்வெளிதுறையில் இருநாடுகளும் இணைந்து செயல்படுவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டதாகவும் அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.  செயற்கை நுண்ணறிவு துறையில் லக்செம்பர்க் நிறுனவங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய தயாராக உள்ளதாக லக்செம்பர்க் நாட்டு அமைச்சர் லெக்ஸ் டெல்ஸ் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2307380&reg=3&lang=1

***

TV/LN/GS  


(வெளியீட்டு அடையாள எண்: 2307729) வருகையாளர் எண்ணிக்கை : 20
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati