ஆயுஷ்
azadi ka amrit mahotsav

“ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு ஆயுர்வேதம்” என்ற கருப்பொருளின் கீழ் 11-வது ஆயுர்வேத தினம் 2026 கொண்டாட்டம்

இடுகை இடப்பட்ட நாள்: 07 SEP 2026 2:55PM by PIB Chennai

11-வது ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு, புதுதில்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் இணைமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ் உரையாற்றினார். இந்நிகழ்வு ஆயுர்வேத தினத்தை நோக்கிய நாடு தழுவிய பிரச்சாரத்தின் தொடக்கத்தைக் குறிப்பதாக அமைந்தது. 11-வது ஆயுர்வேத தினத்தின் முதன்மை விழா, 2026 செப்டம்பர் 23 அன்று மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் “ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு ஆயுர்வேதம்” என்ற கருப்பொருளின் கீழ் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ், ஆயுர்வேத தினம் என்பது நாட்டின் பாரம்பரியத்தைக் கொண்டாடும் நிகழ்வு மட்டுமல்லாமல், அதனை எதிர்கால சுகாதாரத் தேவைகளுடன் இணைக்கும் ஒரு நல்வாய்ப்பு என்று குறிப்பிட்டார். ஒருங்கிணைந்த மருத்துவம், ஆயுர்வேதத்தில் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகள், சமூக நலன் ஆகிய மூன்று முக்கிய அம்சங்களை மையமாகக் கொண்டு இவ்வாண்டின் பிரச்சாரம் அமையும் என அவர் தெரிவித்தார். ஆயுர்வேத தினம் ஒரு மக்கள் இயக்கமாக உருவெடுக்க ஊடகங்கள் முழு ஆதரவளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

தேசிய ஆயுர்வேத நிறுவனத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சஞ்சீவ் சர்மா பேசுகையில், தேசிய தன்வந்திரி ஆயுர்வேத விருதுகள் 2026 வழங்குதல், ஆயுஷ் தொலைநோக்கு 2030 அறிக்கை வெளியீடு மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2307397&reg=3&lang=1

***

TV/SE/GS


(வெளியீட்டு அடையாள எண்: 2307728) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: Marathi , English , Urdu , हिन्दी