சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பட்டியலின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை வழங்கும் நடைமுறையை மத்திய அரசு மேலும் வலுப்படுத்துகிறது

இடுகை இடப்பட்ட நாள்: 07 SEP 2026 2:55PM by PIB Chennai

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம், மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்கள் மூலமாக பட்டியலின மாணவர்களுக்கான மெட்ரிக் கல்விக்கு பிறகான கல்வி உதவித்தொகைத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. பட்டியலின மாணவர்கள் மேல்நிலைக் கல்வி மற்றும் உயர்கல்வியைத் தொடர்வதற்கும், கல்வி வாய்ப்புகளைப் பெறுவதற்கும் இத்திட்டம் துணைபுரிகிறது.

இத்திட்டத்தின் கீழ் தகுதியுள்ள மாணவர்கள், நியமிக்கப்பட்ட மாநிலக் கல்வி உதவித்தொகை இணையதளங்கள் அல்லது தேசியக் கல்வி உதவித்தொகை தளம் (NSP) வாயிலாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். மாநிலங்கள் தங்கள் நிதிப் பங்களிப்பை விடுவிப்பதுடன், சரிபார்க்கப்பட்ட பயனாளிகளின் தரவுகளைத் தேசிய இணையதளத்தில் பதிவேற்றுவதோடு மத்திய அரசின் நிதிப் பங்களிப்பு இணைக்கப்பட்டுள்ளது.

2021-22-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட நேரடிப் பயன் பரிமாற்ற (DBT) முறை மற்றும் ஆதார் இணைக்கப்பட்ட வங்கிச் செலுத்தல்கள் மூலம் நிதி முறைகேடுகள் தவிர்க்கப்பட்டு, விரைவாகவும் வெளிப்படையாகவும் நிதியுதவி நேரடியாகச் சென்றடைவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த தேசிய மற்றும் பிராந்திய நாளிதழ்கள், சமூக ஊடகங்கள் வாயிலாக அமைச்சகம் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. மேலும், தேசிய அளவில் நடத்தப்படும்  மாநாடுகள் மற்றும் பிராந்தியக் கலந்தாய்வுக் கூட்டங்கள் மூலம் இத்திட்டத்தின் செயல்பாடுகள் தொடர்ந்து ஆய்வு செய்யப்படுகின்றன. எளிமையான விண்ணப்ப முறை மற்றும் நம்பகமான பணப்பரிவர்த்தனை மூலம் தகுதியுள்ள அனைத்து பட்டியலின மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை சீராகச் சென்றடைவதை அரசு உறுதி செய்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2307396&reg=3&lang=1

****

TV/SE/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2307684) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati , Kannada