நிலக்கரி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மழை குறைந்ததைத் தொடர்ந்து, கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் உற்பத்தியும், மின்சாரத் துறைக்கான விநியோகமும் உயர்வு

இடுகை இடப்பட்ட நாள்: 07 SEP 2026 5:10PM by PIB Chennai

நிலக்கரிச் சுரங்கப் பகுதிகளில் மழைப்பொழிவு குறைந்ததைத் தொடர்ந்து, நிலக்கரி உற்பத்தி மற்றும் மின் துறைக்கான விநியோகத்தில் கோல் இந்தியா லிமிடெட் நிறுவனம்  குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளது.

 

செப்டம்பர் மாதத்தில் மழை பாதிப்பு ஏற்பட்ட முதல் மூன்று நாட்களில் சுமார் 1.36 மில்லியன் டன்னாக இருந்த கோல் இந்தியா லிமிடெட்  நிறுவனத்தின்  சராசரி தினசரி நிலக்கரி உற்பத்தி, 2026 செப்டம்பர் 6 அன்று சுமார் 1.83 மில்லியன் டன்னாக 35% அதிகரித்தது. சுரங்கப் பணிகளுக்கான சூழல் சீரடைந்து வருவதாலும், மழையால் பாதிக்கப்பட்ட போக்குவரத்துப் பாதைகளும், பணிபுரியும் பகுதிகளும் மீண்டும் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படுவதாலும் இந்த உயர்வு ஏற்பட்டுள்ளது. கோல் இந்தியா லிமிடெட்  நிறுவனத்தின் துணை நிறுவனங்களே இந்த உற்பத்தி அதிகரிப்புக்கு முக்கியக் காரணமாக திகழ்கின்றன.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2307504&reg=3&lang=1

****

TV/BR/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2307683) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Telugu