வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
உலகளாவிய மருத்துவ, நல்வாழ்வு மையமாக இந்தியாவை உருவெடுக்கச் செய்ய மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் அழைப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
07 SEP 2026 2:46PM by PIB Chennai
உலகளாவிய மருத்துவ, நல்வாழ்வு மையமாக இந்தியாவை உருவெடுக்கச் செய்ய மத்திய வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் அழைப்பு விடுத்துள்ளார். புதுதில்லியில் நடைபெற்ற பார்மா மேக்டெக் மற்றும் லேப்நெக்ஸ்ட் கண்காட்சி 2026-ல் அவர் உரையாற்றினார். உலகின் மருந்தகம் என்ற இந்தியாவின் நிலையை மேலும் பலப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்தியாவின் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் மூலம் கிடைக்கும் புதிய வாய்ப்புகளை மருத்துவத் துறையினர் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். கடந்த நான்கு முதல் நான்கரை ஆண்டுகளில் இறுதி செய்யப்பட்ட வர்த்தக ஒப்பந்தங்கள் மூலம் சர்வதேச சந்தை அணுகல் வாய்ப்புகள் கணிசமாக விரிவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மருத்துவ உபகரணங்கள், தொழில்நுட்பப் பிரிவுகளில் உள்நாட்டு புத்தாக்கத்தையும், காப்புரிமை நடைமுறைகளையும் வலுப்படுத்துவது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார். ஆராய்ச்சி, புத்தாக்க மேம்பாட்டிற்காக மத்திய அரசு ரூ.1 லட்சம் கோடி நிதி ஆதரவை வழங்க உறுதிபூண்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தொழில்துறையினர் மற்றும் கல்வி நிறுவனங்கள் இணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். உயர்தர மருத்துவம், உள்நாட்டு உற்பத்தி ஆகியவை மூலம் 2047-ம் ஆண்டிற்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் சுகாதாரத் துறை முக்கியப் பங்காற்றும் என்று திரு பியூஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2307394®=3&lang=1
***
TV/PD/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2307641)
வருகையாளர் எண்ணிக்கை : 7